சமூக ஊடகங்களுக்குப் பதிலாக முதன்மை ஊடகங்களை நாடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!
- Muthu Kumar
- 26 Aug, 2025
புத்ராஜெயா, ஆசு 26-
சமூக ஊடகங்களில் உள்ள தகவல்களை முழுமையாக சார்ந்திருப்பதற்குப் பதிலாக, பொனாமா, ஆர்.டி.எம் போன்ற முதன்மை ஊடகங்களை நாடுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். சமூக ஊடகங்கள் தவறான தகவல்களை வழங்கும் அபாயம் உள்ளதால், அவற்றை முழுமையான ஆதாரமாகப் பயன்படுத்தக்கூடாது என்று பெர்னாமா தலைமை நிர்வாக அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.
ஊடக நெறிமுறைகளை முதன்மை ஊடகங்கள் பின்பற்றி வரும் நிலையில், அதில் வெளியிடப்படும் ஒவ்வொரு செய்தியும் உண்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்."சமூக ஊடகங்களை முதன்மை ஊடக தளமாக மாற்றினால் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாது. அந்த அம்சத்தில் நாம் தவறு செய்வோம்.
எனவே நான் முன்பு சொன்னது போல், மீண்டும் முதன்மை ஊடகங்களுக்குச் செல்வோம். பெர்னாமா, ஆர்.டி.எம்மில் இது பற்றி நன்கு கற்றுத் தரப்படுகிறது. ஊடக நெறிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. செல்லுபடியாகும். உண்மையான தகவல்களை வெளியிடுவதன் மூலம் அதனை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது." என்றார் அவர்.
இணையத்தை நேர்மறையான கோணத்தில் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும், சினமூட்டும் அல்லது பரபரப்பான உள்ளடக்கத்தை உருவாக்க அதைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்குமாறும் நூருல் அஃபிடா வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



