புடி மடானி வலைத்தளத்தில் பொதுமக்கள் தங்களின் தகுதியை சரிபார்க்கலாம்!
- Muthu Kumar
- 26 Sep, 2025
கோலாலம்பூர், செப். 26-
நேற்று காலை மணி 9 முதல், புடி மடானியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், ரோன் 95 புடி மடானி திட்டமான, மடானி95-இன் ரோன் 95 பெட்ரோல் உதவித் தொகையை பெறுவதற்கான தங்களின் தகுதியை பொது மக்கள் சரிபார்த்து கொள்ளலாம்.
புடி மடானி அகப்பக்கத்தில் மக்கள் இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கான தங்களின் தகுதியையும். மாதாந்திர உதவித்தொகை பயன்பாட்டிற்கான மீதத் தொகையையும் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று நிதி அமைச்சு சமூக ஊடகத்தில் நேற்று பதிவிட்டுள்ளது.
மக்கள் தங்களின் அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்தி தகுதி உள்ளிட்ட சுயவிவரங்களைச் சரிபார்த்துக் கொள்வதோடு, ஆரம்ப சரிபார்ப்புக்கு புதிய பதிவு எதுவும் தேவையில்லை https://www. budimadani.gov.my/எனும் அகப்பக்கத்தில் மேற்கொண்ட கண்ணோட்டத் தில் தெரிய வந்தது.
தகுதியை உறுதிசெய்த பின்னர், வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்கை முடுக்கிவிட, பெட்ரோல் நிலையத்தில் உள்ள கட்டணத்தைச் செலுத்துவதற்கான இயந்திரத்தில் மைகார்ட் அட்டைகளை, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தினால் போதுமானது.அதன் பின்னர், ரொக்கம், கடன்பற்று அட்டை, வங்கி அட்டை அல்லது மின்னியல் பணப்பை மூலம் பெட்ரோலுக்கான கட்டணத்தைச் செலுத்தலாம்.
நெரிசலைத் தவிர்க்க புடி95 திட்டம் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட இருப்பதோடு, ராணுவம், போலீஸ் போன்ற சில தரப்பினருக்கு, பொதுமக்களைக் காட்டிலும் முன்கூட்டியே, எரிபொருள் நிரப்புவதற்கான அவகாசம் வழங்கப்படும்.16, அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மலேசியர்களும், காலாவதியாகாத ஓட்டுநர் உரிமத்தைக் கொண்டிருந்தால், மாதத்திற்கு 300 லிட்டர் ரோன் 95 பெட்ரோலை வாங்குவதற்கு தகுதி பெற்றிருப்பதாக அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



