பப்ளிக் கோல்ட் நிறுவனத்தின் மெர்டேக்கா கொண்டாட்டம்!
- Muthu Kumar
- 03 Sep, 2025
கோலாலம்பூர், செப்.3-
மலேசியாவின் 68ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு Merdeka 2025 Open House, Menara Public Gold-இல் நடத்தியது. நிகழ்வில் சுமார் 2,000 பேர், அதாவது வாடிக்கையாளர்கள், தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக Edisi Terhad Gold Bar 68 Tahun Merdeka 2025 என்ற 1 கிராம் எடையுடைய, 999.9 துல்லியத் தன்மை கொண்ட மலேசியக் கொடியின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட தங்கப்பலகை வெளியிடப்பட்டது. இந்த வெளியீட்டை பப்ளிக் கோல்ட் நிறுவனத்தின் நிறுவனர் Dato' Seri Louis Ng Chun Hau மற்றும் அவரது மனைவி, Aurora Italia International Berhad நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Datin Seri Yvonne Lim இணைந்து வெளியிட்டனர்.
"பப்ளிக் கோல்ட் இன்று அடைந்துள்ள வெற்றிகள் அனைத்தும் தரமான தயாரிப்புகள், வெளிப்படையான அமைப்பு, மேலும் தங்கச் சேமிப்பின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த தொழில் முனைவோரின் அர்ப்பணிப்பு காரணமாகும்."என Louis Ng அவர்கள் உரையாற்றினார்.
இந்த வரையறுக்கப்பட்ட பதிப்பு உலகளவில் 10,000 யூனிட்டுகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது; மீண்டும் அச்சிடப்படாது. எனவே, இது வரலாற்றுப் பெருமையும் தேசியச் சின்னத்தையும் பிரதிபலிக்கும் ஒரு சிறப்பு வெளியீடாகக் கருதப்படுகிறது.
வெளியீட்டுக்குப் பிறகு நிதி மற்றும் தங்கச் சேமிப்பு தொடர்பான கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது.அனுபவமிக்க பப்ளிக் கோல்ட் தொழில் முனைவோர் தங்கள் அனுபவங்கள் மற்றும் வணிகத் திட்டங்களைப் பகிர்ந்து, பங்கேற்பாளர்களுக்கு ஊக்கமளித்தனர். இது, தங்கத் துறையில் போட்டித்திறன் மிக்க தொழில் முனைவோரை உருவாக்கும் பப்ளிக் கோல்ட் நிறுவனத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தியது,
Public Gold Merdeka 2025 Open House உறவுகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தங்கத்தை வலிமை, பாரம்பரியம் மற்றும் தேசியப் பெருமையின் சின்னமாக விளக்கிக் காட்டும் தளமாகவும் அமைந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



