தீபாவளிக்கு பொது விடுமுறை- சரவாக் மாநில அரசிடம் பரிந்துரை-டத்தோ ஸ்ரீ ஃபடிலா யூசோப்!

top-news
FREE WEBSITE AD

கூச்சிங், ໙. 11

தீபாவளிக்கு பொது விடுமுறையை பிரகடனம் செய்யுமாறு சரவாக் மாநில அரசாங்கத்திடம் தாம் பரிந்துரைக்கப் போவதாக, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடிலா யூசோப் கூறியுள்ளார். சரவாக்கில் உள்ள இந்து மக்கள், இது குறித்து அவ்வப்போது கோரிக்கைகளை விடுத்து வருவதை தாம் அறிந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

“சரவாக்கில் தீபாவளிக்கு பொதுவிடுமுறை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை அதிகமானோர் முன்வைத்து வருகின்றனர். இதை சரவாக் மாநில அரசாங்கமும் அறிந்து வைத்துள்ளது என்று நான் நம்புகிறேன். அதனால், இந்த விவகாரத்தை நான் தனிப்பட்ட முறையில் மீண்டும் மாநில அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” என்று ஃபடிலா கூறியுள்ளார்.

கூச்சிங் இந்தியர் சங்கத்தினால்,நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவில் கூச்சிங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் பேசும்போது ஃபடிலா இதனைத் தெரிவித்தார்.தீபாவளிக்கு பொது விடுமுறை வழங்குமாறு, மாநில இந்திய சமூகத்தினர் விடுத்து வரும் கோரிக்கையை மாநில அரசங்கம் பரிசீலிக்கும் என்று, மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அபாங் ஜொஹாரி ஓப்பெங் கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *