மலேசியர்களின் நீண்ட ஆயுளுக்காக பொதுக் கொள்கையில் மாற்றம் வேண்டும்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 17: மலேசியர்களின் ஆயுள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் வாழ்க்கை தரத்தையும் மரியாதையையும் உறுதி செய்யும் வகையில், பொதுக் கொள்கைகளில் மாற்றம் தேவை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சராசரியாக மலேசியர் 76 வயது வரை வாழக்கூடியவராக இருக்கலாம், ஆனால் அதற்கு முன் ஒன்பது ஆண்டுகள் மோசமான உடல்நலத்துடன் செல்கின்றன என்று அவர் கூறினார். இது, 67வது வயதுக்குப்பின் உடல்நலம் வீழ்ச்சி பெறுகிறது என்பதைக் காட்டுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, சுகாதாரம், பொது நலக்கல்வி மற்றும் சமூக ஆதரவு அமைப்புகளில் அதிக முதலீடுகள் செய்ய வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

நோய்களைச் சிகிச்சை செய்யும் முறைமையைவிட, வாழ்நாள் முழுவதும் நலத்தை ஊக்குவிக்கும் ஒரு புதிய முறையை நோக்கிப் பயணிக்க வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார்.

நம் நிறுவனங்கள், கொள்கைகள், சிந்தனைகள் இந்த மாற்றத்திற்கு தயாரா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என்று அவர் நினைவூட்டினார்.

அதேபோல், நாட்டின் பொருளாதாரம், சமூக ஒற்றுமை மற்றும் நமது வாழ்க்கைத் திட்டங்களை, நீண்ட ஆயுளுக்கேற்ப மறு வடிவமைக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகளின் உலக மக்கள் தொகை தரவுகளின்படி, 1970களில் மலேசியாவில் 100 வயதைக் கடந்தவர்கள், பத்து பேருக்கும் குறைவாக இருந்தனர். இன்று, அந்த எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது என்றும், இது தொடர்ந்து வளர்ச்சியடையும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக அன்வார் கூறினார்!

Perdana Menteri Anwar Ibrahim menegaskan dasar awam perlu disesuaikan dengan peningkatan jangka hayat rakyat Malaysia. Pelaburan dalam kesihatan, pendidikan dan sokongan sosial penting bagi memastikan kualiti hidup warga emas terus terjamin.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *