ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் தேமுவுக்கான மக்களின்ஆதரவு அதிகரித்துள்ளது- ஸாஹிட் !

top-news
FREE WEBSITE AD

குவா மூசாங், ஏப். 29

ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு (தேமு) மிகப் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறியிருந்தாலும், அத்தேர்தலில் தேமுவுக்கான பல்லின மக்களின் ஆதரவு அதிகரித்திருந்ததாக, அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

உண்மையில், அத்தொகுதியில் உள்ள மொத்த 20 வாக்களிப்பு மையங்களில் ஒரு மையத்தில் மட்டும்தான் தேமுவுக்கு 88 வாக்குகள் குறைந்துள்ளன என்றும் இதர 19 வாக்களிப்பு மையங்களையும் தேமுவே கைப்பற்றி பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றிருக்கிறது என்றும் ஸாஹிட் கூறியுள்ளார்.

"மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் மற்றும் பூர்வகுடியினரிடமிருந்து ஆதரவு அதிகரித்திருப்பதை நாங்கள் பார்த்தோம் என்று கிளந்தான், குவா மூசாங்கில் நேற்று திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றின்போது, துணைப் பிரதமருமான ஸாஹிட் குறிப்பிட்டார்.ஆயர் கூனிங் தொகுதியில் உள்ள மொத்தம் 31,897 தகுதி பெற்றுள்ள வாக்காளர்களில் 58.07 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்துள்ளதால், வாக்களிக்க வந்தோரின் எண்ணிக்கை குறைவாகப் பதிவாகி இருந்தது.

இன்னமும் ஆங்காங்கே நடந்து வரும் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களும் சீன சமூகத்தினர் மத்தியிலான செங் பெங் பண்டிகையும் இதற்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

"வாக்காளர்களில் பெரும்பாலோர் அப்போதுதான் தங்களின் வீடுகளுக்குத் திரும்பி இருந்ததால் அவர்களால் வாக்களிக்க
வரமுடியாமல் போயிருக்கலாம். "முக்கியம் என்னவென்றால்,நாங்கள் ஆயர் கூனிங் தொகுதியை தக்க வைத்துக் கொண்டது மட்டுமில்லாமல், இரண்டு மடங்குக்கும்
அதிகமான வாக்குகளையும் பெற்றிருக்கின்றோம்" என்று ஸாஹிட் கூறினார்.

"இந்த வெற்றிக்காக நாங்கள் பல்வேறு அணுகுமுறைகளை கையாண்டோம். ஒவ்வொரு வாக்காளரும் ஒரு குறிப்பிட்ட முறையில் கவனிக்கப்பட வேண்டும் என்பது முக்கியமாக இருந்தது."இதற்கு முன்னர் நடந்த நெங்கிரி, மக்கோத்தா மற்றும் பெலாங்கி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும் பெறப்பட்ட வெற்றிக்கு, நாடு முழுமையிலும் உள்ள தேர்தல் கேந்திரங்கள், மாநில மற்றும் தொகுதி தலைமைத்துவ தேர்தல் கேந்திரங்களின் கடுமையான பணி வழிவகுத்திருந்தது”என்று ஸாஹிட் தெரிவித்தார்.

சனிக்கிழமை நடந்து முடிந்த ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில், தேசிய கழ முன்னணி வேட்பாளர் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.பாஸ் கட்சியைச் சேர்ந்த பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் அப்துல் முஹைமின் மாலேக் 6,059 வாக்குகளையும் மலேசிய சோசலிச கட்சியைச் சேர்ந்த பவானி கன்னியப்பன் 1,106 வாக்குகளையும் பெற்றிருந்தனர். பெரும்பான்மை 5,006 வாக்குகளாகும்.

கடந்த 2022ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட இஸ்ஹாம் ஷாருடின் 2,213 வாக்குகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில் 74.85 விழுக்காட்டினர் வாக்களித்திருந்தனர்.

Ayer Kuning pilihan raya kecil menyaksikan peningkatan sokongan pelbagai kaum kepada BN, kata Zahid. Walaupun peratusan keluar mengundi menurun, BN menang dengan majoriti besar 5,006 undi, menewaskan calon PN dan PSM dalam PRK yang berlangsung Sabtu lalu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *