மானிய விலை LPG பறிமுதல்!
- Shan Siva
- 19 Sep, 2025
ஈப்போ, செப் 19: பேராக்கின் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன
அமைச்சு (KPDN), பாரிட் பண்டாருக்கு
அருகிலுள்ள கோலா குராவ், ஜாலான் பந்தாய்
என்ற இடத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நடத்திய சோதனையின் போது 102 மானிய விலை
திரவ பெட்ரோலிய எரிவாயுவான LPG சிலிண்டர்களைக்
கைப்பற்றியுள்ளது.
ஓப் கசாக் 2025 இன் கீழ் காலை 9.34 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை, ஒரு வார கண்காணிப்பைத் தொடர்ந்து
நடத்தப்பட்டதாக இயக்குநர் டத்தோ கமாலுதீன் இஸ்மாயில் தெரிவித்தார்.
12 மற்றும் 14 கிலோகிராம் எடையுள்ள 102 மானிய விலை எல்பிஜி சிலிண்டர்கள் தேவையான அனுமதியின்றி சேமித்து
வைக்கப்பட்டிருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமலாக்கக் குழு ஒரு லாரி மற்றும் பல ஆவணங்களையும் பறிமுதல் செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த
மதிப்பு RM31,690.80 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை சேமித்து வைத்ததற்காக, விநியோகக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் 1974
இன் கீழ் வளாக உரிமையாளர் குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனை அடுத்து மானிய விலையில் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை தவறாகப் பயன்படுத்துவதை பல்வேறு அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் புகாரளிக்குமாறு பொதுமக்களை கமாலுதீன் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



