கூலிம் இந்து சபா இடுகாட்டில் வேலி அமைக்க மானியம்!
- Muthu Kumar
- 22 Oct, 2025
(கே. ஆர். மூர்த்தி)
கூலிம், அக்.22-
கூலிம் இந்து சபாவின் மேற்பார்வையில் அமைந்துள்ள இடுகாட்டை சுற்றிலும் சுவரிலான வேலி அமைக்க 10 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்குவதாக கெடா மாநில மனிதவளம், இந்தியர், சீனர், சயாமியர் சமூக விவகாரம் மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்களின் ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் சியா ஸென் தெரிவித்தார்.
கூலிம் கெலாடி பகுதியில் கூலிம் இந்து சபாவின் இடுகாடு அமைந்துள்ளது. இந்த
இடுகாட்டை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வேலி மோசமான நிலையில் இருப்பதால் அதை சுற்றிலும் சுவரிலான வேலி அமைக்க மானியம் கோரப்பட்டது.அதன்படியே அவரும் இந்து சபாவின் கோரிக்கையை ஏற்று இடுகாட்டிற்கு மாநில அரசாங்கத்தின் சார்பில் 10 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்குவதாகவும், அந்த 10 ஆயிரம் வெள்ளி மானியத்திற்கு 30 ஆயிரம் செங்கல் வேலி அமைக்க வழங்குவதாக தெரிவித்தார்.
அதோடுமட்டுமல்லாமல் கூலிம் இந்து சபாவின்
ஏற்பாட்டில் தீபாவளியை முன்னிட்டு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்விற்கு மூவாயிரம் வெள்ளி வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை கூலிம் சட்டமன்ற அலுவல சேவைமையத்தின் ஏற்பாட்டில் இங்குள்ள சீனி சட்டி சோறு உணவகத்தில் தீபாவளி அன்பளிப்பு மற்றும் அங்பாவ் வழங்கும் நிகழ்வில் மேற்கண்டவாறு கூலிம் சட்டமன்ற உறுப்பினருமான வோங் சியா ஸென் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



