எதிர்க்கட்சி எம்பிக்களுக்கான மானியம்: கூடுதல் விவரங்களைக் கோரும் பெரிக்காத்தானின் கடிதம் கிடைத்தது!

top-news
FREE WEBSITE AD

கூச்சிங், மார்ச் 17-

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மானியம் குறித்த பேச்சுக்கள் மீதான கூடுதல் விவரங்களை எதிர்பார்க்கும் பெரிக்காத்தான் நேஷனலின் கடிதம் ஒன்றை தாம் பெற்றிருப்பதை, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் உறுதிப்படுத்தியுள்ளார்.

பெரிக்காத்தான் தலைமை கொறடா டத்தோ ஸ்ரீ தக்கியூடின் ஹசானினால் அனுப்பப்பட்ட அக்கடிதத்தை தாம் ஆராய விருப்பதாகவும் அது குறித்து உடனடி பதிலை தாம் தெரிவிக்க விருப்பதாகவும் ஃபடில்லா கூறியுள்ளார்.

"அக்கடிதத்தை ஆராய்ந்த மற்றும் இதன் தொடர்பில் வழிகாட்டுதல்களைத் பெற்ற பின்னர், அதற்கு நான் பதிலளிப்பேன். ஆனால், இந்த விவகாரம் குறித்து தகவல் சாதனங்களில் விவாதிக்க வேண்டியதில்லை" என்று சரவாக், கூச்சிங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் ஃபடில்லா தெரிவித்தார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மானியம் தொடர்பிலான பேச்சுக்கள் குறித்த கூடுதல் தகவல்களைக் கோரி, ஃபடில்லாவுக்கு பெரிக்காத்தான் நேஷனல் ஒரு கடிதத்தை அனுப்பி வைக்கும் என்று தக்கியூடின் முன்பு கூறியிருந்தார்.

இதனிடையே, மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மானுக்கான தொகுதி மானியம் குறித்து கருத்து கேட்டபோது, அது குறித்து கருத்துரைக்க ஃபடில்லா மறுத்து விட்டார்.

சைட் சாடிக்கின் விண்ணப்பம் அரசாங்கத்தினால் பரிசீலிக்கப்பட்டுதற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக வும் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளில் பலவற்றை சைட் சாடிக் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், ஃபடில்லா கடந்த வாரத்தில் கூறியிருந்தார்.

Timbalan Perdana Menteri, Datuk Seri Fadillah Yusof, mengesahkan menerima surat Perikatan Nasional mengenai peruntukan Ahli Parlimen pembangkang. Beliau akan mengkajinya sebelum memberi jawapan. Permohonan peruntukan Syed Saddiq juga sedang dipertimbangkan dan berada di peringkat akhir.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *