கூச்சிங் தீ விபத்து - 9 வயது சிறுவன் பலி!
- Shan Siva
- 07 Mar, 2026
கூச்சிங், மார்ச் 7: Sri Aman பகுதியில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 வயது சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் இன்று அதிகாலை Taman Sentosa Indah பகுதியில் நடந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தெரிவித்துள்ளது.
அதிகாலை சுமார் 3மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து Sri Aman தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இந்த தீ விபத்தில் இரண்டு மாடிகள் கொண்ட வீடு முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது. வீட்டின் மேல்தளத்தில் 9 வயது சிறுவனின் கருகிய உடல் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பின்னர் அந்த உடல் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விபத்தில் 41 வயது பெண் மற்றும் 65 வயது ஆண் தீக்காயம் அடைந்து Sri Aman Hospital மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேலும், 40 வயது பெண், 13 வயது சிறுமி மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் கால்களில் தீக்காயம் அடைந்த நிலையில் பொதுமக்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



