திடீர் சந்திப்பு! சம்சூரிதான் அடுத்த PN தலைவரா?!
- Shan Siva
- 06 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 6: பெரிகாத்தான் நேஷனல்
(PN) முன்னாள் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின்
மற்றும் பாஸ் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ
டாக்டர் அக்மத் சம்சூரி மொக்தார் ஆகியோருக்கிடையேயான சந்திப்பு, சம்சூரி கூட்டணியின் அடுத்த தலைவராக
உருவெடுக்கலாம் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இந்தச்
சந்திப்பைச் சுட்டிக்காட்டும் படங்களை பாச்சோக் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹ்த் சியாஹிர்
சே சுலைமான் தனது முகநூல் பதிவில்
பகிர்ந்துள்ளார்.
இந்த முன்னேற்றம், திரங்கானு முதலமைச்சருமான அக்மத்
சம்சூரிக்கு கூட்டணியின் தலைமையுரிமையை ஒப்படைக்கும் முயற்சிகள் நடைபெறலாம் என்ற
பேச்சுகளைத் தூண்டியுள்ளது.
இதற்கு முன்னர், PN தலைவர் பதவியில் இருந்து முகைதீன் யாசின்
விலகியதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டணி
பாஸ் கட்சி முன்னணியில் செயல்படும் என பாஸ் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்
உறுதிப்படுத்தியிருந்தார்.
மேலும், PN தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் குறித்து
விவாதிக்க இந்த வாரம் ஒரு கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் பெர்சாத்து (Parti Pribumi Bersatu Malaysia) கட்சியின்
தலைவர்கள் பங்கேற்பார்கள் எனவும் அப்துல் ஹாடி தெரிவித்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



