2026 வரவு செலவுத் திட்டம்-மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களில் கவனம் செலுத்தப்படும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 7-

2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், மக்களின் நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்ட சில முதன்மை திட்டங்களுக்கு அரசாங்கம் கவனம் செலுத்தும். மக்களுக்கு உதவுவதோடு, அவர்களின் வாழ்க்கைச் செலவின சுமைகளைக் குறைப்பது மட்டுமின்றி உலகளாவிய சவால்களின் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வதற்கு, இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக, இரண்டாம் நிலை துணைப்பிரதமர் ஃபடில்லா யூசோப் கூறினார்.

"ஆனால் இம்முறை மக்களுக்கு உதவுவதில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. முக்கியமான திட்டங்கள். வெள்ளப் பிரச்சினைகள், நீர் விநியோக பிரச்சினைகள், மக்களுக்கான சக்தி, அவர்களுக்கான ஆதரவு, பாதிக்கப்படக்கூடிய குழுக்கள். அதுதான் அரசாங்கத்தின் கவனம் என்று நான் நினைக்கின்றேன். நமது மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைப்பதற்காக நான் அதைத்தான் அடைய விரும்புகிறேன். இந்த நிச்சயமற்ற தருணத்தில் நாம் எவ்வாறு உதவ முடியும். நிச்சயமற்ற உலகம், இதுதான் கவனத்தில் கொள்ள வேண்டியது." என்றார் அவர்.

கடந்தாண்டு தாக்கல் செய்த 2025 ஆம் ஆண்டு கடல் செலவுத் திட்டத்தில், கல்வி அமைச்சுக்கு 6 ஆயிரத்து 410 கோடி ரிங்கிட் மற்றும் உயர்கல்வி அமைச்சுக்கு 1 கோடியே 810 கோடி ரிங்கிட் என வரலாற்றில் மிக உயர்ந்த தொகையை கல்வி துறைக்கு மடானி அரசாங்கம் ஒதுக்கியிருப்பதாக, அவர் கூறினார்.

இதனிடையே, ஒவ்வோர் ஆண்டும் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படுவதையும் ஃபடில்லா யூசோப் சுட்டிக்காட்டினார். மேலும், சபா, சரவாக்கிற்கான ஒதுக்கீட்டையும், மடானி அரசாங்கம் அதிகரிக்கும் என்று தாம் நம்புவதாக, அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *