மக்களவையில் இன்று பட்ஜெட் தாக்கல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 10-

2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை (2026 பட்ஜெட்) பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வெள்ளிக்கிழமை மாலையில் மக்களவையில் தாக்கல் செய்ய விருக்கிறார்.

இந்த பட்ஜெட் தாக்கல் சுமுகமாக நடந்து முடிவதை உறுதிப்படுத்த இறைவனிடம் பிரார்த்திக்குமாறு அனைத்து மலேசியர்களையும் நிதி அமைச்சருமான அன்வார் கேட்டுக் கொண்டுள்ளார்.

நான்காவது மடானி பட்ஜெட்டை அவர் இன்று மாலை 4 மணிக்கு வாசிக்கத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சுமுகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த அன்வார் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நிதி அமைச்சுக்கு வந்திருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *