தஞ்சாவூரில் வாக்குச் சேகரித்த உதயநிதி ஸ்டாலின்
- Surendran Sumdraraj
- 06 Apr, 2026
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர்களான பேராவூரணி அசோக்குமார், பட்டுக்கோட்டை அண்ணாதுரை, ஒரத்தநாடு வைத்திலிங்கம், தஞ்சாவூர் சண்.இராமநாதன் ஆகியோருக்கு வாக்கு கேட்டு தொகுதி வாரியாகப் பிரசாரம் செய்தார்.
இதில் உதயநிதி பேசியதாவது, "தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று, அங்கு இருக்கக்கூடிய மக்கள், கட்சியினரைச் சந்தித்து நம்முடைய உதயசூரியன் சின்னத்திற்கும், நம்முடைய கூட்டணிச் சின்னத்திற்கும் வாக்கு கேட்டு வருகிறேன். எத்தனையோ மாவட்டத்துக்குப் போயிருந்தாலும், இந்தத் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருவது எப்பவும் சிறப்பு என்றார்.
தஞ்சாவூர் மாவட்டம் எப்பொழுதும் திமுக-வின் கோட்டை. இந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்தான் கலைஞர் கருணாநிதியைக் கொடுத்த மாவட்டம். அவருடைய காலடி படாத இடமே கிடையாதென்று சொல்கின்ற அளவுக்கு இங்கு வாழ்ந்தவர்.
1962இல் தேர்தலில் கருணாநிதி தஞ்சை மண்ணிலிருந்துதான் வெற்றி பெற்றார். கலைஞர், தலைவரைப் போல் அதே பெருமையோடு, நானும் ஒரு டெல்டாகாரன் என்கிற உரிமையோடு உங்களையெல்லாம் சந்திக்க வந்திருக்கிறேன்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



