எரிபொருள் விலை உயர்வு! அரசு மறு பரிசீலனை! - இன்று சிறப்புக் கூட்டம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 14: அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருளின் விலை உயர்வைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து மறுபரிசீலனை செய்யும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தேசியப் பாதுகாப்பு மன்றம் மற்றும் தேசியப் பொருளாதார நடவடிக்கைக் குழுவுடனான கூட்டம் இன்று நடைபெறும் என்று அவர் கூறினார்.

சாத்தியமான நடவடிக்கைகளை ஆராய்வதற்காக இன்று கூட்டம் நடத்தப்படும் என்றும், தற்போதைக்கு நாட்டில்  விநியோகம் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு லிட்டர் RON95 பெட்ரோல் மானிய விலையை RM1.99 ஆகப் பராமரிப்பது மற்றும் பள்ளிப் பேருந்துகளுக்கு டீசல் உதவி வழங்குவது உள்ளிட்ட, பொதுமக்கள் மீதான சுமையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அன்வார் கூறினார்.

குறைந்தபட்சம் மே மாதம் வரை ஒரு லிட்டர் RM1.99 என்ற மானிய விலையைத் தக்கவைக்க நாட்டில் போதுமான RON95 கையிருப்பு உள்ளது என்று அவர் முன்னதாகக் கூறியிருந்தார்.

இருப்பினும், மோதல் வெடித்த வாரங்களில், புத்ராஜெயா மேற்கு மலேசியாவில் டீசல், RON97 பெட்ரோல் மற்றும் மானியம் இல்லாத RON95 ஆகியவற்றின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *