கிளந்தான் ஆறுகளில் நீர் அதிகரிப்பால் வெள்ள அபாயம் ஆரம்பம்!

top-news
FREE WEBSITE AD

கோத்தா பாரு, நவ. 23 -

கடந்த வியாழக்கிழமை கன மழை பெய்திருப்பதைத் தொடர்ந்து, கிளந்தானில் உள்ள மூன்று முக்கியமான ஆறுகளில் தொடர்ந்து வெள்ள நீர் அதிகரித்து வருவதால், அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

நேற்று பிற்பகல் 3 மணி வரையில், கோலோக், செமேராக் மற்றும் கெமாசின் ஆகிய மூன்று முக்கிய ஆறுகளில், எச்சரிக்கை குறிகளை கடந்து வெள்ள நீர் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள கோலோக் ஆற்றில், 0.23 மீட்டரையும் கடந்து நேற்று பிற்பகலில் நீரின் அளவு 8.23 மீட்டராகப் பதிவானது. செமேராக் ஆற்றில் 2.58 மீட்டராகவும் (எச்சரிக்கை அளவு 0.58 மீட்டர்) கெமாசின் ஆற்றில் 8.36 மீட்டராகவும் (எச்சரிக்கை அளவு 0.36 மீட்டர்) பதிவாகி இருந்தது. எனினும், நேற்று மாலை வரையில், எந்த ஒரு பகுதியிலிருந்தும் யாரும் வெளியேற்றப்படவில்லை. இதனிடையே, கிளந்தான் ஆற்றிலும் நீரின் அளவு சுமாராக அதிகரித்திருப்பதாகவும் நேற்றுமுன்தினம் இரவு முதல் இடைவிடாது மழை பெய்த போதிலும், வெள்ளம் கரையைக் கடக்கும் ஆபத்து இல்லை

என்றும் ஆய்வொன்று கூறியது. மாநிலத்தில் வெள்ளம் ஏற்படுமேயானால் அதை எதிர்கொள்ள, மாநிலத்தின் அனைத்து அரசாங்க நிறுவனங்களும் தயார் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *