கோலாலம்பூர் இடைக்கால போலீஸ் தலைவராக முஹமட் யூசோஃப் ஜான் நியமனம்!
- Muthu Kumar
- 19 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 19-
கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவர், டத்தோ முஹமட் யுசுஃப் ஜான் முஹமட், இன்று தொடங்கி, இடைக்கால கோலாலம்பூர் போலீஸ் தலைவராக பொறுப்பேற்பார்.கடந்த ஜூன் 25ஆம் தேதி முதல், புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்ட டத்தோ ருஸ்டி முஹமட் இசாவுக்குப் பதிலாக இவர் அப்பொறுப்பை ஏற்கிறார்.
கோலாலம்பூரில் அமைந்துள்ள போலீஸ் தலைமையகத்தில், புக்கிட் அமான் நெறிமுறை. தரநிலை இணக்கத் துறையின் இயக்குநர் டத்தோ ஹம்சா அஹ்மட் முன்னிலையில் இப்பதவி ஒப்படைப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கோலாலம்பூருக்கான புதிய போலீஸ் தலைவர்
நியமிக்கப்படும் வரையில், அப்பொறுப்பை ஏற்றிருக்கும் டத்தோ முஹமட் யுசுஃபுக்கு ஹம்சா தமது வாழ்த்தைத் தெரிவித்து கொண்டார்.“அவரின் பரந்த அனுபவம். நம்பகத்தன்மை, தலைமைத்துவத்தை தொடர்ந்து வெற்றியை உருவாக்கும். மேலும் நிலைத் தன்மையைப் பராமரிப்பதோடு சமூகத்தினராலும் மதிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்," என்றார் அவர்.
இதனிடையே, ஓராண்டிற்கும் மேலான தமது பணிக்காலத்தில், திட்டமிடப்பட்ட அனைத்து முயற்சிகளையும் வெற்றிகரமாக்க துணை புரிந்த, கோலாலம்பூர் போலீஸ் படையைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்து கொள்வதாக டத்தோ ருஸ்டி தமது உரையில் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



