முகைதீனுக்கு ஆதரவு இல்லை; அது அனுமானம் மட்டுமே!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20: பெரிக்காத்தான் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், 15வது பொதுத்தேர்தலுக்குப் பிறகு பிரதமராக வருவதற்கு ஆதரவளித்த 115 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பில்லை என்று அம்னோவின் முன்னாள் பிரமுகர் டத்தோஸ்ரீ சலே சைட் தெரிவித்துள்ளார்.

முகைதீன் பெயர்களை வெளிப்படுத்தினால் பெரிக்காத்தான் உறுப்பினர்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழக்க நேரிடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

டத்தோ டாக்டர் புவாட் ஸர்காசி சவால் விடுத்துள்ளபடி, முகைதீன் அனைத்து 115 எம்.பி.க்களின் பெயர்களையும் வெளியிட மாட்டார் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் அவருக்கு அந்த அளவுக்கு ஆதரவு இல்லை என்பதொடு, வெறும் அனுமானங்களை மட்டுமே செய்கிறார் என்று அவர் நினைவூட்டினார்,

அவர் எம்.பி.க்களின் பெயர்களை வெளியிட முயற்சித்தால், அவர்களில் சிலர் அதை உறுதிப்படுத்த மறுத்தால் அவர் ஒரு தலைவராக நம்பகத்தன்மையை இழக்க நேரிடும்.

இதன் விளைவாக, பெரிக்காத்தான் அவரை தலைவர் பதவியில் இருந்து தள்ளிவிட்டு அவருக்குப் பதிலாக நம்பகமான மற்றும் புத்திசாலியான ஒருவரை நியமிக்கும் என்று அவர் இன்று தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

நேற்று, அம்னோ உச்சமன்ற உறுப்பினரான புவாட், தன்னைப் பிரதமராக்க ஆதரித்ததாகக் கூறப்படும் எம்.பி.க்களின் பட்டியலை வெளியிடுமாறு முகைதீனுக்கு சவால் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

 


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *