முகைதீன் இனி பிரதமர் வேட்பாளர் கிடையாது! - சம்சூரி பதிலடி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 5: Perikatan Nasional கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில், அதன் தலைவர் Ahmad Samsuri Mokhtar முன்னாள் பிரதமர் Muhyiddin Yassinக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
முகைதீன் இனி பிரதமர் வேட்பாளராக இல்லை என்பது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளார்.

Terengganu மாநில மந்திரி பெசாராகவும் இருக்கும் Ahmad Samsuri, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் பலர் கேள்வி எழுப்பியதால் தான் விளக்கம் அளித்ததாக கூறினார்.
யார் பிரதமர் வேட்பாளர் என்பதைக் காட்டிலும், தற்போதைய முக்கிய நோக்கம் PN கூட்டணியை வலுப்படுத்தி அடுத்த தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதுதான் என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னதாக, Muhyiddin Yassin, Kemaman நாடாளுமன்ற உறுப்பினரும் Ru Rendang சட்டமன்ற உறுப்பினருமான Ahmad Samsuri, PN தலைவராக நியமிக்கப்பட்டது அவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததாக அர்த்தமாகாது  என்று கூறியிருந்தார்.

Pagoh நாடாளுமன்ற உறுப்பினருமான Muhyiddin, பிரதமர் வேட்பாளர் தேர்வு குறித்து இதுவரை எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும், Pas கட்சியின் வலியுறுத்தலின் பேரில் தான் Ahmad Samsuri PN தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *