பெர்சத்துவில் வெடித்தது கோஷ்டி “போர்” கட்டுப்பாட்டை இழந்தார் முஹிடின்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 1-

பெர்சத்து கட்சியில் உள்ள முக்கியமான இரண்டு கோஷ்டிகளுக்கிடையே வெளிப்படையாக "போர்" வெடித்துள்ளது. வெளியில் தெரியாமல் இருந்த அத்தகைய "போர் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் அஸ்மின் அலி மீது அதன் உச்சமன்ற உறுப்பினர் வான் சைஃபுல் வான் ஜான் பகிரங்கமாகத் தாக்குதல்களை தொடுத்திருப்பதைத் தொடர்ந்து, இதுவரையில் திரைக்குப் பின்னால் நடந்து கொண்டிருந்த "குற்றச்சாட்டுப் போர் இப்போது வெளிப்படையாக அரங்கேறவும் தொடங்கி இருக்கிறது.

சிறிது காலமாகவே பெர்சத்து கீழ்நோக்கிய சுழற்சியில் இருந்து வந்தது என்று,மலேசிய இஸ்லாமிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஷாஸா சுக்ரி கூறியுள்ள வேளையில், கட்சித் தலைவர் முஹிடின் யாசின் கட்சியில் தமது கட்டுப்பாட்டை இழந்திருப்பது போன்று தோன்றுவதால், உள்கட்சி சண்டை மோசமடையக் கூடும் என்று நுசாந்தாரா கல்விக் கழகத்தைச் சேர்ந்த அஸ்மி ஹசான் குறிப்பிட்டுள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான்-தேசிய முன்னணி கூட்டணி, நாட்டை ஆள்வதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் வேளையில், பெர்சத்து சிறிது காலமாக கோஷ்டிவாதத்துடன் போராடி வந்தது. அதோடு, பெரிக்காத்தான் நேஷனலின் ஓர் உறுப்புக் கட்சியான பாஸ் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நான்கு மாநிலங்களின் ஆட்சி மீது கவனம் செலுத்தியும் வருகிறது என்று, ஷாஸா தெரிவித்துள்ளார்.

"இதுபோல், கட்சியில் நிலவும் அனைத்து விவகாரங்களிலும் கவனம் செலுத்தாமல் முஹிடின் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்? இத்தகைய "அரசியல் சித்து வேலைகளை" நிறுத்துமாறு குரல் கொடுக்க யார் இருக்கின்றார்?

“இத்தகைய போக்கு இன்னமும் வெறும் கோஷ்டிவாதமானதாக இல்லை. ஆனால், பெர்சத்து கட்சியில் உள்ள முக்கியமான தலைவர்களுக்கிடையிலான "போருக்கு வெளிப்படையான அழைப்பை விடுத்திருக்கிறது.

பதவியிலிருந்து "வான் சைஃபுல் அல்லது அஸ்மின் ஆகியோரில் ஒருவர். தற்போதைய வெளிப்படையான வாக்குவாதத்தில் இருந்து பின்வாங்கினால் மட்டுமே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று, எஃப்எம்டியிடம் ஷாஸா தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்
தம்மை நீக்க, பெர்சத்து கட்சிக்குள்ளேயே பிரச்சாரம் நடந்து கொண்டிருப்பதாக முஹிடின் கூறியிருப்பதாக அஸ்மின் தெரிவித்துள்ளார். அதோடு கட்சி அவரின் கட்டுப்பாட்டில் இல்லாததால் கட்சிக்குள் இத்தகைய நிலை நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெர்சத்து தலைவர் பதவியை முஹிடின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் "திட்டம்" வேகம் பெற்று வந்தது. மேலும் இதை கவனிக்காமல் அப்படியே விட்டு விட்டால் "கெட்ட ரத்தம் கட்சிக்குள் "பரவிடும்' அதாவது கட்சிக்குள் வேறு யாரோ நுழைந்து ஆட்சி புரியத் தொடங்கி விடுவார்கள் என்று, ஷாஸா தெரிவித்துள்ளார்.

“இந்த விவகாரம் முஹிடினினால் முறையாக கையாளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பெர்சத்துவில் அவர் தமது கட்டுப்பாட்டு அதிகாரத்தை இழந்துவிட்டார். அத்தகைய கட்டுப்பாட்டை தாம் இழந்திருப்பதை இப்போது அவர் உணர்ந்திருக்க வேண்டும் என்று அஸ்மி குறிப்பிட்டார். கட்சியில் தற்போது "போர்"புரிந்து வரும் கோஷ்டிகள் ஒன்றாக வந்து, பெர்சத்து கட்சிக்கு ஏற்படுத்தப்படக் கூடிய பெரிய சேதங்களின் ஆபத்து மற்றும் பிரச்சினைக்குரிய விவகாரங்கள் குறித்து பேசவேண்டும் என்று அஸ்மி கூறினார்.

முஹிடினை கட்சித் தலைவர் பதவியிலிருந்து வெளியேற்றும் சதித் திட்டத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கோஷ்டியின் தலைவர்களை அஸ்மினும் பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் துன் பைசல் இஸ்மாயில் அஜிஸும் மிரட்டியதாக, வான் சைஃபுல் நேற்றுமுன்தினம் திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியிருந்தார்.

முஹிடினை வெளியேற்றுமாறு நெருக்குதல்களை கொடுப்பதற்காகவே பெர்சத்து தொகுதித் தலைவர்களிடம் இருந்து கையெழுத்துகள் சேகரிக்கப்படவில்லை என்று கூறிய வான் சைஃபுல், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நடந்த கட்சி பொதுப் பேரவையில் பெர்சத்து கட்சியின் பிரதமர் வேட்பாளர் குறித்து பேசப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே அவ்வாறு செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

ஓரினப் புணர்ச்சியில், முன்னாள் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான அஸ்மின் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும். 2019ஆம் ஆண்டில் பொதுவில் பகிரப்பட்ட சர்ச்சைக்குரிய காணொளி விவகாரத்திற்கு இன்னமும் தீர்வு காணப்படாமல் இருப்பதால், கட்சித் தலைவர் பதவிக்கு அஸ்மின் தகுதியற்றவர் என்றும் வான் சைஃபுல் கூறியிருந்தார்.

பெர்சத்து கட்சியில் தற்போது நிலவும் வெளிப்படையான தகராறு,முஹிடின் யாசினிடமிருந்து பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியை தன் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற பாஸ் கட்சியின் கோரிக்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது என்று ஷாஸா தெரிவித்தார்.

பெரிக்காத்தான் தலைவர் பதவியை அடுத்து, எதிர்வரும் 16ஆவது பொதுத் தேர்தலில் தனது கட்சியைச் சேர்ந்த ஒருவரே பிரதமர் வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட வேண்டும் என்ற பாஸின் கோரிக்கைக்கும் பெர்சத்துவின் விவகாரங்கள் வலுசேர்த்திருப்பதாக அவர் கூறினார். செப்டம்பர் மாத பொதுப் பேரவையில், பெர்சத்து கட்சியின் பிரதமர் வேட்பாளராக முஹிடினை தேர்வு செய்யும் ஒரு தீர்மானத்தை பேராளர்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டதாக, அஸ்மின் கூறியிருந்தார்.

"பெரிக்காத்தான் நேஷனலை இனி வழிநடத்த பாஸ் கட்சிக்கு வழிவிட வேண்டும் என்று கோருவதற்கான காரணங்களை இத்தகைய விவகாரங்கள் அக்கட்சிக்கு வழங்குகின்றன.. என்று நான் நினைக்கின்றேன் என ஷாஸா தெரிவித்தார்."தனது சொந்தக் கட்சிப் பிரச்சினையையே தீர்த்துக்கொள்ள முடியாத ஒரு கட்சியாக பெர்சத்து இருந்து வருவதுபோல் தெரிகிறது. ஆதலால், பெரிக்காத்தான் நேஷனலை வழிநடத்த அதனால் எப்படி திட்டமிட முடியும்? மேலும் நாட்டை எப்படி வழிநடத்தவும் முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

எழுபது வயதுக்கு கீழ்ப்பட்ட ஒருவர்தான் பெரிக்காத்தான் நேஷனலின் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று பாஸ் விரும்புவதன் மூலம், பெரிக்காத்தானின் பிரதமர் வேட்பாளர் தாம்தான் என்ற முஹிடினின் விருப்பத்தை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நிராகரித்திருப்பதை அஸ்மி ஆதரித்துள்ளார்."முஹிடினின் நாட்கள் எண்ணப்படுவதாக நான் நினைக்கின்றேன் என்றும் அஸ்மி தெரிவித்தார்.

"அதிருப்திகள் அதிகமாகி, கட்சியைப் பிளவுபடுத்தி வரும் வேளையில், முஹிடினின் பதவிக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், பெர்சத்து தலைவர் பதவியை மற்றொருவரிடம் வழங்க அவருக்கு இதுதான் சரியான நேரம் என்று ஷாஸா தெரிவித்தார்.
"சரியான நேரத்தில் தலைவர் பதவி ஒப்படைப்பானது, தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள பதவியேற்புத் திட்டத்தின் வழி, பெர்சத்துவின் நீண்டகால எதிர்காலம் மற்றும் இலக்கு குறித்து சில உத்தரவாதங்களை வழங்கும் அதே நேரத்தில், சட்டப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் பிரதமர் வேட்பாளர்கள் குறித்த முன்னும் பின்னுமாக உள்ள கருத்துகளை நிறுத்தியும் விடும்" என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *