முகைதீன் மன்னிப்பு கேட்க வேண்டும்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 21: அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட அவதூறான கூற்றுகளுக்கு பெரிகாத்தான் நேஷனல் தலைவர் முகைதீன் யாசின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.

அரசாங்கம் கொடூரமானது, அது கிளந்தானுக்கு நிதி ஒதுக்கவில்லை என,  இதுபோன்ற நூற்றுக்கணக்கான கூற்றுக்கள் இதில் அடங்கும் என்று அவர் ஆசியான் சட்ட மன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

 ஏற்கெனவே, முகைதீன் குறித்து அன்வார் கூறிய கருத்துகள் தொடர்பாக அன்வார் மன்னிப்பு  கேட்க வேண்டும் என முகைதீனும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை அடுத்து முகைதீன் பற்றிய கருத்துக்களில் தாம் குறிப்பிட்ட தகவல் ஆதாரங்கள் தவறானவையா என்பதைத் தீர்மானிக்க மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (MCMC) விசாரணையின் முடிவுகளுக்காகக் காத்திருப்பதாக அன்வார் கடந்த வாரம் மக்களவையிடம் கூறினார்.

MCMC ஆதாரங்கள் சட்டவிரோதமானவை என்றும், அவர் தவறு செய்துவிட்டார் என்றும் உறுதிப்படுத்தினால், முகைதீனிடம் மன்னிப்பு கேட்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அன்வார் கூறியிருந்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *