முகைதீனை விசாரணைக்கு அழைக்க வேண்டும்! - பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர் சைஃபுடின் அப்துல்லா
- Shan Siva
- 06 Nov, 2025
கோலாலம்பூர், நவ 6: பெர்சாத்து கட்சியின் ஒழுங்குமுறை வாரியம் அதன் தலைவர்
முகிதீன் யாசினை விசாரணைக்கு வரவழைத்து சாட்சியமளிக்க வேண்டும் என்று பெர்சாத்து
உச்ச மன்ற உறுப்பினர் சைஃபுதீன் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
முகிதீன் கட்சித் தலைவர் பதவியை
ராஜினாமா செய்ய வேண்டும் என்று தான் கோரியதாகக் கூறப்பட்டதாக சைஃபுதீன் ஒரு
அறிக்கையில் தெரிவித்தார்.
ஒழுங்குமுறை வாரியத்திடம் பல
கேள்விகளை எழுப்ப விரும்புவதாக சைஃபுதீன் கூறினார்.
இந்த கேள்விகளுக்கு முகிதீன்
மட்டுமே பதிலளிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
எனவே, தாம் எழுப்ப விரும்பும் இந்தப் பிரச்சினைகள் குறித்து
ஒழுங்குமுறை வாரியத்திற்கு விளக்கம் அளிக்க முகைதீன் அழைக்கப்படுவது பொருத்தமானது
மற்றும் அவசியமானது என்று அவர் கூறினார்.
முகிதீனின் சாட்சியத்தை
மதிப்பாய்வு செய்த பின்னரே, அவருக்கு
எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து ஒழுங்குமுறை வாரியம் முடிவு செய்ய
முடியும் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



