முகைதீன் + உதிரிக் கட்சிகள்... அது தேர்தல் கூட்டணி அல்ல! – பாஸ்
- Shan Siva
- 14 Sep, 2025
கோலாலம்பூர், செப் 14: இந்தியர்கள் கட்சிகளான மலேசிய முன்னேற்றக் கட்சி மற்றும் உரிமை கட்சி ஆகிய இரு கட்சித் தலைவர்களுடன் பாஸ் (PAS) எந்த உத்தியோகபூர்வக் கூட்டணியையும் ஏற்படுத்தவில்லை என்று அந்தக் கட்சியின் உலமா மன்றத் தலைவர் அஹ்மத் யஹ்யா தெரிவித்துள்ளார்.
வேத மூர்த்தி தலைமையிலான மலேசிய முன்னேற்றக் கட்சியும்,
பி. ராமசாமி
தலைமையிலான உரிமையும் தற்போது பெரிகாத்தான் நேஷனல் தலைவர் முகைதீன் யாசின்
தலைமையில் உள்ள கூட்டணியில் பங்கேற்கின்றன.
இது தேர்தல் கூட்டணி அல்ல; நிரந்தரக் கூட்டணியும்
அல்ல. வாழ்வாதாரச் செலவு போன்ற மக்களுக்கான பிரச்சினைகளை கையாளும் நோக்கத்திலேயே
அமைக்கப்பட்டுள்ளது என அஹ்மத் யஹ்யா தெரிவித்தார்.
இந்த தளர்வான கூட்டணி பாஸ் மற்றும் பெரிகாத்தான் நேஷனல்
இடையேயான அரசியல் கூட்டுறவை பாதிக்காது. நாங்கள் நம்பிக்கையைக் கைவிட்டுவிட்டோம்
என்ற குற்றச்சாட்டு அரசியல் எதிரிகள் பரப்பும் கதைக்களமே என்றும் அவர் கூறினார்.
உலமா மன்றத்தின் முக்தாமரில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



