சுக்மா 2026-தேசிய குத்துச்சண்டை திறமைகளைக் கண்டறிய முக்கிய மேடை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 26-

2026இல் நடைபெறவுள்ள மலேசிய விளையாட்டு விழா (சுக்மா) தேசிய குத்துச்சண்டை விளையாட்டில் புதிய திறமைகளைக் கண்டறியும் முக்கிய மேடையாக அமையும் என்று மலேசிய குத்துச்சண்டை சம்மேளன தலைவர் டத்தோ மொகமட் இருவான் சுல்கிப்லி தெரிவித்தார். இது ஒலிம்பிக் உள்ளிட்ட அனைத்துலகப் போட்டிகளுக்கு நீண்டகால தயாரிப்பாக இருக்கும். பிரபலமான அனைத்துலகப் போட்டிகளான காமன்வெல்த் விளையாட்டு. ஆசிய விளையாட்டு, ஒலிம்பிக்கில் மிளிரும் திறன் கொண்ட இளம் வீரர்களைக் கண்டறிந்து பயிற்சி அளிக்க, நீண்டகால வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி வருவதாகவும், அதன் மூலம் அனைத்துலக அளவில் பதக்கங்களை வெல்ல முடியும் என கூறினார்.

பயிற்சி, போட்டிகள் மூலம் உண்மையான திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை
வீரர்களாக உருவாக்குவதற்கு திட்டமிடுகிறோம் என்று அவர் தெரிவித்தார். சுக்மா 2026, குறிப்பாக 17 முதல் 18 வயதுடைய இளம் வீரர்களை முன்னிலைப்படுத்துவதற்கு முக்கியமானது என்று இருவான் வலியுறுத்தினார். இவர்கள் சுக்மாவில் வெற்றி பெற்றால், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு 24 வயதாகும் போது, இது அவர்களை உயர்ந்த மட்டத்திற்கு உயர்த்துவதற்கு போதுமான கால அவகாசத்தை வழங்கும் என்றார். இந்தத் திட்டத்தை இளைஞர், விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோவிடம் அவர் விவாதித்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும், மாநிலங்களில் உள்ள 13 பயிற்சி மையங்களை மேம்படுத்துவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரி எம்பிஎப் ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. இந்த மையங்களில் சிறந்த வளையங்கள் உள்ளிட்ட புதிய உபகரணங்களை வழங்குவதன் மூலம் பயிற்சி தரத்தை உயர்த்துவது இலக்காக உள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *