சுகுக் நிதி மோசடி! - டான்ஸ்ரீயிடம் MACC விசாரணை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 11: கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை அமைப்பதற்காக சுகுக் நிதியை மோசடி செய்த வழக்கில் டான் ஸ்ரீ அந்தஸ்து கொண்ட சந்தேக நபரிடம் மலேசிய லஞ்ச  ஊழல் தடுப்பு ஆணையமான MACC இன்று வாக்குமூலம் பெற்றது.

MACC இன் இரண்டு விசாரணை அதிகாரிகள் தலைநகரில் உள்ள டான் ஸ்ரீயின் வீட்டில் சோதனை நடத்தினர்.

கூடுதலாக, மலாக்காவில் உள்ள டான் ஸ்ரீயின் வீட்டிலும் MACC சோதனை நடத்தியதாகவும், ஆனால் எந்த வித பறிமுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு சம்பந்தப்பட்ட டான் ஸ்ரீயிடமிருந்து MACC வாக்குமூலம் பெறும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

முன்னதாக, கைப்பைகள், நகைகள், சொகுசு வாகனங்கள், கைக்கடிகாரங்கள், பணம் மற்றும் டான் ஸ்ரீ க்குச் சொந்தமானது என்று நம்பப்படும் RM32 மில்லியன் மதிப்புள்ள ஒரு சொகுசு வீடு உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை MACC பறிமுதல் செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது!

MACC merekod keterangan seorang individu bergelar Tan Sri berhubung penipuan dana sukuk bagi projek lebuh raya di Lembah Klang. Siasatan turut dijalankan di rumahnya di Kuala Lumpur dan Melaka, namun tiada rampasan terbaru dilakukan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *