அன்வாருக்கே முழு ஆதரவு! - டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், நவ 17: : ம.இகாவின் 79 வது பேராளர் மாநாடு நிறைவுற்ற நிலையில், பாரிசானிலிருந்து ம.இ.கா வெளியேறுவது குறித்த குழப்பம் நீடிப்பதாகவே தெரிகிறது.   கட்சியின் பேராளர்களில் பெரும்பகுதியினர். விலக முடிவெடுத்திருப்பதாக சொல்லப்பட்ட  நிலையிலும் அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இந்த ஆட்சி முழுதும் எங்கள் ஆதரவு தொடரும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கட்சி பாரிசான் நேஷனலில் இருந்து பிரிய முடிவு செய்தாலும் கூட  பிரதமர் அன்வார் இப்ராஹிமின் பதவிக்காலம் முடியும் வரை அவருக்கு  ஆதரவளிப்பதாக  விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதே வேளை பிரிந்து செல்லும் பேச்சையும் நிராகரித்தார். கட்சி பாரிசான் நேஷனலை  விட்டு வெளியேறினால் மற்றொரு கூட்டணியில் சேர வேண்டும் என்று கூறினார். இருப்பினும், பாரிசானை விட்டு வெளியேறுவதா இல்லையா என்பது குறித்து கட்சியின் மத்திய செயற்குழு விரைவில் இறுதி முடிவை எடுக்கும் என்று விக்னேஸ்வரன் மேலும் கூறினார்.

பிரதமர் மீது எந்த வருத்தமும் இல்லை என்று அவர் கூறினார். எனவே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பிரதமருக்கு ஆதரவளிப்பதில்  உறுதியாக இருப்பதாகக் கூறினார்.
பதவிக் காலம் முழுவதும் அன்வாரை ஆதரிப்போம் என்று நாங்கள் முன்பே உறுதியளித்துள்ளாதால், அந்த முடிவு இன்னும் நடைமுறையில் உள்ளது என்று நேற்றைய. செய்தியாளர்கள்  சந்திப்பில்  கூறினார்.

மேலும்,கடந்த வெள்ளிக்கிழமை பக்காத்தான் ஹராப்பான் தலைவருடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்ததாகவும் விக்னேஸ்வரன் கூறினார். 
பாரிசானை விட்டு வெளியேற விரும்புகிறோம் என்று தாம் அன்வாரிடம் தெரிவித்ததாகவும்.  நாங்கள் நீண்ட காலமாக பாரிசானுடன் இருப்பதால், அதை மறுபரிசீலனை செய்யுமாறு அவர் தனக்கு அறிவுறுத்திய்தாகவும் விக்னேஸ்வரன் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *