சிலாங்கூர் FC ரசிகர்களுக்கு சுல்தான் எச்சரிக்கை1
- Shan Siva
- 03 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 3: திரெங்கானுவின் பிரசித்திபெற்ற டிராபிரிட்ஜில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சிலாங்கூர் எஃப்சி ஆதரவாளர்கள் நடத்தை மாநிலத்தின் நல்ல பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிலாங்கூர் எஃப்சியின் பாதுகாவலராக (Patron)
உள்ள சுல்தான் ஷராஃபுடின், இந்தச்
சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தமும் ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தையடுத்து 33 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறான சம்பவம் மிகுந்த
வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. கும்பல் வன்முறை, ஒழுக்கமற்ற செயல்கள் போன்றவற்றை தாம எந்தவிதத்திலும் சகிக்க முடியாது
என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு பின்னால் இருப்பவர்களைக் காவல்துறை
கண்டறிந்து, அவர்கள் குற்றவாளிகளாக
நிரூபிக்கப்பட்டால் சட்டத்தின் முழு தண்டனையையும் அமல்படுத்தப்பட வேண்டும் என அவர்
தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் எஃப்சி ஆதரவாளர்கள் அனைவரும் தங்களது செயல்களில்
எச்சரிக்கையுடன் இருந்து, கால்பந்து கிளப்பின் மற்றும்
மாநிலத்தின் நல்ல பெயரை பாதுகாக்க வேண்டும் என சிலாங்கூர் அரண்மனை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது
அமைதியை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் நிரூபிக்கப்படும்
ஆதரவாளர்களுக்கு, சிலாங்கூர்
எஃப்சி போட்டிகளுக்கு வருவதற்குத் தடை விதிக்கலாம் என்றும் சுல்தான் பரிந்துரைத்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன் கைது
செய்யப்பட்ட 33 சிலாங்கூர் எஃப்சி ஆதரவாளர்கள்,
கோல தெரங்கானு டிராபிரிட்ஜில் பேரணியாகச் சென்று பிளேர்கள்
(flares) ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பொது அமைதியை சீர்குலைத்த குற்றச்சாட்டின் பேரில் அவர்கள்
கைது செய்யப்பட்டனர். பரிசோதனையில், ஏழு
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவர் உட்பட 21 பேர் கஞ்சா உட்கொண்டதும் தெரியவந்தது.
இந்தச் சம்பவம், சுல்தான் மிசான் ஸைனல் அபிடின்
மைதானத்தில் நடைபெற்ற
போட்டிக்கு முன்பாக நடந்தது. அந்தப் போட்டியில், சிலாங்கூர் எஃப்சி – திரங்கானு எஃப்சி அணிகள் 1–1 என்ற
கோல் கணக்கில் சமநிலையைப் பெற்றன!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



