தற்போதைய புகை மூட்டத்திற்கு மனிதனின் செயல்பாடே காரணம்!
- Muthu Kumar
- 21 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 21 -
சில நாட்களாக நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்திற்கு அண்மைய காட்டுத் தீயும்,புதர் நெருப்பும் காரணமல்ல. மாறாக, தீ வைப்புச் சம்பவங்களில் ஈடுபட்ட மனித நடவடிக்கையே அதற்கு உண்மையான காரணம் என்று, தீயணைப்பு மற்றும் மீட்பு இலாகா தலைமை இயக்குநர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
"இயற்கையாக தீ பரவுவது சாத்தியமல்ல. எனவே, குறிப்பிட்ட தடயவியல் விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், மனிதச் செயல்களால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்பது மிகவும் சாத்தியமாகும் என்று. பெர்னாமாவிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதனால், சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் பல பகுதிகளில் காற்றின் தரம் சுகாதாரமற்ற நிலையை அடைந்திருப்பதை, ஆகக் கடைசியான காற்று தூய்மைக்கேடு குறியீடு காட்டுவதாக, சுற்றுச் சூழல் இலாகா கூறியுள்ளது.
நெகிரி செம்பிலானின் நீலாயிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரையில் காற்று தூய்மைக்கேடுக் குறியீடு 156ஆக பதிவாகி இருக்கிறது. சிலாங்கூரின் ஜொஹான் செத்தியாவில் 155ஆகவும் போர்ட்டிக்சனில் 153 ஆகவும் பந்திங்கில் 151ஆகவும் அதி பதிவாகி இருப்பதாக, அவ்விலாகா தெரிவித்துள்ளது.
புத்ராஜெயாவில் அக்குறியீடு சுகாதாரமற்ற அளவிலான 99ஆக பதிவாகி இருப்பதாகவும்
அவ்விலாகா கூறியுள்ளது.இதைத் தவிர்த்து பகாங்கின் தெமர்லோவில் அக்குறியீடு 98ஆகவும் பெட்டாலிங் ஜெயா, மலாக்காவின் புக்கிட் ரம்பாய் மற்றும் பேராக்கின் தாசேக் ஈப்போ ஆகிய மாவட்டங்கள் உட்பட நாடு முழுமையிலும் 57 மாவட்டங்களில் 79ஆகவும் பதிவாகி இருக்கிறது.
பூஜியத்திலிருந்து 50 வரைக்குமான குறியீடு நல்ல காற்றுத் தரம், 51-100 வரை மிதமானது, 101-200 வரை ஆரோக்கியமற்றது, 201-300 வரை மிகவும் ஆரோக்கியமற்றது மற்றும் 300க்கு மேற்பட்டது மிகவும் ஆபத்தானதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



