கோலலங்காட் அமானா நேசனலின் மனித நேய சேவை!
- Muthu Kumar
- 24 Jul, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
பந்திங், ஜூலை 24-
கோலலங்காட் மாவட்ட அமானா நேசனல் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி ஜூலை ஹாவின் மகள் நலமின்றி பந்திங் மருத்துவமனை நான்காவது வார்டில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தைகள் நல வார்டில் மருத்துவர் தாதியர் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வரும் அவரது பிள்ளையை மாவட்ட அமானா நேசனல் தலைவர் ஹாஜி ஹஸ்னுல் பகாருடின் தலைமையில் கட்சியின் செயலவை உறுப்பினர்கள் மனித நேய அடிப்படையில் நேற்று காலையில் நேரில் சென்று நலம் விசாரித்ததோடு கணிசமான உதவித் தொகையும் உணவுப் பொருட்களையும் வழங்கி ஆறுதல் கூறினார்.
மோரிப் சட்ட மன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான ஹஸ்னுல், வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள பிள்ளையின் நோய்த் தன்மை குறித்து மருத்துவரிடம் தாம் கலந்தாலோசித்ததாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மோரிப் சட்ட மன்ற இந்திய சமூகத் தலைவர் எலிசா சாம்சன் இமானுவேல், கோலலங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர் புவான் யுஸ்ரினா ஹாஜி இட்ரூஸ், அமானா நேசனல் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



