AI மற்றும் ரோபோக்களால் வரும் காலத்தில் மனித வேலைக்கு ஆபத்து - எலான் மஸ்க்!

top-news
FREE WEBSITE AD

செயற்கை நுண்ணறிவும், ரோபோக்களும் கட்டுக்கடங்காத வளர்ச்சி அடையும்போது, மனிதர்கள் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆனால் எலான் மஸ்க் இது கண்டிப்பாக நடக்கும் என்று அடித்து சொல்கிறார். பணம் தனது மதிப்பை இழந்து, AI மற்றும் ரோபோக்களால் இயங்கும் புதிய காலம் உருவாகும் என்பதே அவரது கணிப்பு.

ஒருவேளை, 20 வருடங்களுக்குள்ளாக, வேலை செய்வது விருப்பமானதாக மாறும். இப்போது பலர் பார்ட் டைம் வேலை செய்கிறார்கள். இனி அது இருக்காது. இனி முழுநேர வேலையும் விருப்பமானதாக மாறி, ஒரு பொழுதுபோக்காகவே இருக்கும். இந்த மாற்றம் இன்னும் விரைவாக, 10 அல்லது 15 ஆண்டுகளில் கூட நிகழலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் தோட்டத்தில் காய்கறிகளை விளைவிப்பது அல்லது கடையில் வாங்குவது போல, வேலையும் விருப்பமானதாக மாறும் என்று அவர் விளக்கி உள்ளார். AI மற்றும் ரோபோக்களின் வளர்ச்சி, உழைப்பின் தேவையை நீக்கி,"நீங்கள் எதை நினைக்கிறீர்களோ, அதை அடைய முடியும் என்ற எதிர்காலத்தை உருவாக்கும் என அவர் நம்புகிறார்.

இதை ஒருமுறை அல்ல மீண்டும் மீண்டும் டிரம்ப் பல மேடைகளில் கூறி வருகிறார். AI மற்றும் ரோபோக்கள் அனைத்து வேலைகளையும் மாற்றியமைக்கும் என்றும், வேலை செய்வது, பொழுதுபோக்கிற்காக காய்கறி வளர்ப்பது போல ஒரு விருப்பமான செயலாக மாறும் என்றும் எச்சரித்து வருகிறார். .

பில்லியன் கணக்கான மனிதவடிவ ரோபோக்கள் உலகை நிரப்பும். அனைத்து ஓட்டுநர் பணிகளில் 90 சதவீதம் தானியங்கி மயமாக்கப்படும். பொருட்கள் மற்றும் சேவைகள் கிட்டத்தட்ட இலவசமாக மாறும் என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டு உள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *