ஆசியான் உச்சநிலை மாநாடு-டிரம்பை ஒதுக்கினால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்து விடாது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 1-

இம்மாத இறுதியில் கோலாலம்பூரில் நடைபெற விருக்கும் 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதிலிருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஒதுக்கி வைப்பதனால் மட்டும். எந்த ஒரு விவகாரமும் தீர்ந்துவிடப் போவதில்லை.

பாலஸ்தீன விவகாரம் ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அவருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் மீதான டிரம்பின் நிலைப்பாட்டை மையமாக வைத்து, தலைவர்கள் உட்பட பல தரப்பினர் விடுத்திருக்கும் கருத்துகள் அனைத்தையும் பிரதமர் அலுவலகம் கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பதாக, பிரதமரின் மூத்த பத்திரிகை செயலாளர் துங்கு நஸ்ருல் அபைடா கூறியுள்ளார்.

"பாலஸ்தீனம் மீதான மலேசியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை. அது தெளிவானது. உறுதியானது மற்றும் சீரான நிலைப்பாடுடையது.“காஸாவை தற்காப்பதிலும், இஸ்ரேலின் ஆதிக்கத்தைச் சாடுவதிலும், மற்றும் தார்மீக குரல் எழுப்புவதிலும் தீக்கமாக குரல் எழுப்பி வரும் உலகத் தலைவர்களில் பிரதமரும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒருவராவார் என்று நேற்று செவ்வாய்க்கிழமை துங்கு நஸ்ருல் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டு ஆசியான் தலைவர் எனும் முறையில் மலேசியா நடத்தும் இந்த உச்சநிலை மாநாட்டில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா. ஜப்பான், கொரியா மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள விருக்கின்றனர்.

பாலஸ்தீனம் தொடர்பிலான மலேசியாவின் உறுதியான நிலைப்பாடு, பிரதமரினால் கடந்த காலத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர்களிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டது என்றும் துங்கு நஸ்ருல் தெரிவித்தார். "உண்மையை மூடி மறைக்காமல் நேருக்கு நேர் பேச வேண்டும் என்று. அரசதந்திர கொள்கை நம்மை கோருகிறது என்று அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *