அம்னோவும் அமானாவும் வாயை மூடிக் கொண்டு இருக்காதீர்! பாஸ் கட்சி காட்டம்!
- Thinagaren Sanggaren
- 01 Oct, 2025
அக்தோபர் 1,
அமேரிக்க அதிபர் Donald Trump மலேசியாவுக்கு வருவதை அம்னோவும் அமானா கட்சியும் வாயை மூடிக்கொண்டு வரவேற்க கூடாது என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Datuk Seri Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார். ஒற்றுமைக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் அம்னோவும் அமானாக் கட்சியும் அமேரிக்க அதிபர் Donald Trump மலேசியாவுக்கு வருவது குறித்து அவர்களின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என Datuk Seri Tuan Ibrahim Tuan Man வலியுறுத்தினார்.
மடானி ஆட்சியில் உள்ள பல்லினக் கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக இஸ்லாத்தை அவ்வப்போது தொட்டுக்கொள்கிறார்கள். ஆனால் அமானாவும் அம்னோவும் இஸ்லாத்தை முதன்மைப்படுத்தும் கட்சிகளாக இருப்பதால் அதே இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படும் அமேரிக்க அதிபர் Donald Trump போன்றவர்களை மலேசியாவுக்கு வரவேற்குமா என பாஸ் கட்சியின் Datuk Seri Tuan Ibrahim Tuan Man கேள்வி எழுப்பினார். பாலஸ்தீனப் பிரச்சனையில் அமானா கட்சி உறுதியான ஆதரவை வழங்குவதாக மாட் சாபு மேடைகளில் முழக்கமிடுகிறார். ஆனால் Donald Trump வருகையை அமைதியாக அனுமதிக்கிறார் என பாஸ் கட்சியின் Datuk Seri Tuan Ibrahim Tuan Man சாடினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



