ஒழுக்கமில்லாதவர்கள் பாரிசானிலிருந்து விலகி இருங்கள்! – Datuk Akmal Saleh
- Thinagaren Sanggaren
- 31 Oct, 2025
அக்தோபர் 31,
பாரிசான் இளைஞர் பிரிவின் பொருளாளர் Datuk Shahrul Nasrun Kamarudin இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகப் பாரிசான் இளைஞர் பிரிவுத் தலைவர் Datuk Akmal Saleh தெரிவித்தார். இந்த இடைநீக்கம் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் தனிப்பட்ட ஒழுங்கீனச் செயல்கள் தொடர்பானது என்பதால் இது தற்காலிகமான இடைநீக்கம் மட்டும் தான் என Datuk Akmal Saleh தெரிவித்தார். அவருடைய தனிப்பட்ட விசயங்களில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால் சுய ஒழுக்கமில்லாதவர்கள் பாரிசானிலிருந்து விலகியிருப்பது நல்லது என்பதை மட்டும் வலியுறுத்துகிறேன் என Datuk Akmal Saleh தெரிவித்தார்.
பாரிசான் இளைஞர் பிரிவுப் பொருளாளரான Datuk Shahrul Nasrun Kamarudin முன்னாள் மனைவி தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்களால் தாம் தொந்தரவுக்குள்ளாகுவதாகவும் இதற்கு பின்னனியில் தன்னுடைய கடந்த காலத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பதைத் தாம் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும் என Datuk Shahrul Nasrun Kamarudin முன்னாள் மனைவி Amyera Zainal தனது சமூக ஊடகத்தில் குற்றச்சாட்டை முன்வைத்தார். இது குறித்து பலரும் Amyera Zainal இந்த குற்றச்சாட்டு Datuk Shahrul Nasrun Kamarudinக்கு நேரடியாக விடுக்கப்பட்டிருப்பதால் அவர் இதற்கு விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் Datuk Shahrul Nasrun Kamarudin தனிப்பட்ட விசயங்களில் கவனம் செலுத்த இந்த இடைநீக்கம் வழிவகுக்கும் என Datuk Akmal Saleh தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



