நெகிரி செம்பிலான் அரசியல் பரபரப்பு: DKU கூட்டம் குறித்து முதல்வரிடம் விளக்கம் கோரும் UMNO–BN

top-news
FREE WEBSITE AD

நெகிரி செம்பிலான், ஏப். 29-

Negeri Sembilan மாநில அரசியல் சூழலில் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. United Malays National Organisation (UMNO) மற்றும் Barisan Nasional கூட்டணி, மாநில முதல்வர் Aminuddin Harun மீது விளக்கம் கோரி அழுத்தம் அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்ற Dewan Keadilan dan Undang (DKU) சிறப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து தெளிவான விளக்கம் தருமாறு UMNO–BN வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் உண்மையில் ஒருமித்த தீர்மானமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

UMNO மற்றும் BN தரப்பில் வெளியிடப்பட்ட கேள்விகளில், “அந்த கூட்டத்தின் மினிட்ஸ் (minutes), கலந்து கொண்டவர்களின் பட்டியல், அதிகாரப்பூர்வ ஆதரவு பதிவுகள் எங்கே?” என கேட்கப்பட்டுள்ளது. மேலும், DKU அமைப்பு ஆலோசனை குழுவாக மட்டுமே செயல்படுகிறதெனில், அதன் அடிப்படையில் மாநில அரசு இறுதி முடிவுகளை எவ்வாறு எடுத்தது என்றும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த விவகாரம் தீவிரமடையும் முன், மாநில அரசின் EXCO கூட்டத்தில் UMNO–BN பிரதிநிதிகள் ஏன் தகவல் பெறவில்லை என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *