அம்னோ தனிமனித சொத்து அல்ல, மலாய் சமூகத்துக்கான தாய் வீடு” – முகமது காலிட் நோர்டின்
- Surendran Sumdraraj
- 08 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 8-
UMNO கட்சி யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல; அது மலாய் சமூகத்தை பாதுகாக்கவும் முன்னேற்றவும் உருவாக்கப்பட்ட “தாய் வீடு” என அம்னோ துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமது காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
UMNO தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி, கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் அம்னோவில் இணைவதற்கு வாய்ப்பை வழங்கியுள்ளார் என்றார்.
அந்த அழைப்பை அனைத்து தரப்பினரும் திறந்த மனதுடன் ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த அழைப்பு, அம்னோ ஒரு சாதாரண அரசியல் இயக்கம் மட்டுமல்ல என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அம்னோ உருவாக்கப்பட்ட நாளிலிருந்து, மலாய் சமூகத்தை பாதுகாக்கவும், அவர்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யவும், அவர்களை ஒன்றிணைக்கவும் முக்கிய மேடையாக செயல்பட்டு வருகிறது என்று முகமது காலிட்நோர்டின் தெரிவித்தார்.
மேலும், கட்சியின் வலிமை அதன் உறுப்பினர்களின் ஒற்றுமையிலும் ஒத்துழைப்பிலும் இருக்கிறது என்றும் அவர் கூறினார். கடந்த காலத்தில் வேறு காரணங்களால் கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் திரும்பி வந்து அம்னோவை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



