ஆன்லைன் சேர்க்கையில் இளைஞர்கள் அதிகரிப்பு: அம்னோவில் புதிய நம்பிக்கை – அகமட் சாஹிட்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 11-

அம்னோ கட்சியில் அண்மைக்காலமாக இளைஞர்கள் அதிக அளவில் இணையத் தொடங்கியிருப்பது கட்சிக்கு நேர்மறையான அறிகுறியாக உள்ளது என்று அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் Ahmad Zahid Hamidi தெரிவித்துள்ளார்.

அம்னோவின் 80ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தனது பேஸ்புக் பதிவில் கருத்து தெரிவித்த அவர், ஆன்லைன் உறுப்பினர் பதிவு வசதியின் மூலம் பல இளைஞர்கள் கட்சியில் இணைந்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.

“அம்னோ தலைவர் என்ற முறையில் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்யும் விஷயங்களில் ஒன்று, இளம் தலைமுறை அதிகமாக ஆன்லைன் வழியாக அம்னோவில் இணையத் தொடங்கியிருப்பதுதான்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 80 ஆண்டுகளைக் கடந்துள்ள அம்னோ கட்சி காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்று தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்கும் முக்கிய அரசியல் தளமாக மக்கள் இன்னும் அம்னோவை நம்புகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *