அம்னோவில் மீண்டும் இணைவதா? இன்னும் முடிவு எடுக்கவில்லை! – KHAIRY JAMALUDDIN!
- Thinagaren Sanggaren
- 02 Nov, 2025
நவம்பர் 2,
அம்னோவில் தாம் மீண்டும் இணைவது குறித்து இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவராக இருந்த கைரி ஜமாலுடின் தெரிவித்தார். பொது நிகழ்ச்சியில் அம்னோ தலைவர் ழ் ZAHID HAMIDI உடனான சந்திப்பில் கைரி மீண்டும் அம்னோவில் இணைவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கைரி மீண்டும் இணைவதற்கான விண்ணப்பதை அம்னோவிடம் வழங்கினால் அம்னோ உச்சமன்றம் ஒரு முடிவை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது,
இந்நிலையில் அம்னோவிலிருந்து வெளியேற்றப்பட்ட கைரி மீண்டும் அம்னோவில் இணைவது குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகின. இதே வேளையில் தாம் இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார். இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களை அம்னோவில் மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் என அம்னோ மாநிலங்கவைகள் தீர்மானத்தை ஏற்றியது. அவர்களின் தீர்மானத்தை நான் மதிக்கிறேன். ஆனால் மீண்டும் அம்னோவில் இணைவது குறித்து தாம் பல முறை சிந்திக்க வேண்டும் என கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



