HADI AWANG ஒரு மதவாதி! அரசியலுக்காக மதத்தைப் பயன்படுத்தும் பாஸ் கட்சி! – அம்னோ சாடல்!

- Sangeetha K Loganathan
- 08 Jun, 2025
ஜூன் 8,
பாஸ் கட்சியின் இனவாதத்தை மலாய்க்காரர்களே விரும்புவதில்லை என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Datuk Dr Puad Zarkashi சாடினார். பாஸ் கட்சியின் உறுப்பினர்கள் மதவாதியான Tan Sri Abdul Hadi Awang மீது கண்மூடித்தனமான நம்பிக்கையைக் கொண்டிருப்பதாகாவும் படர்ந்த சமூகத்தின் மீது பாஸ் கட்சிக்கு ஒரு நாளும் அக்கறை இருந்த்ததில்லை என்றும் Datuk Dr Puad Zarkashi தெரிவித்தார். உண்மையில் Tan Sri Abdul Hadi Awang அறிவாற்றல் மிக்கவர். ஆனால் அரசியலுக்காக இஸ்லாத்தை மட்டுமே பயன்படுத்துகிறார் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Datuk Dr Puad Zarkashi சாடினார்.
மலாய்க்காரர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் மதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியலை முன்னெடுக்கும் பாஸ் கட்சி ஆதரவைப் பெறுவதாகவும் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Datuk Dr Puad Zarkashi நினைவூட்டினார். Hadi Awang தலைமையை எதிர்த்து, பாஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்த அமானா கட்சியில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருந்தாலும் மற்ற சமூகத்தையும் ஒருங்கிணைத்து பல்லினக் கட்சியாக இருக்கிறது. பாஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் கெராக்கான், மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP போன்ற கட்சிகள் பாஸ் கட்சியின் மீது சவாரி செய்யும் ஒட்டுண்ணிகள் போன்றது என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Datuk Dr Puad Zarkashi சாடினார்.
UMNO mengecam PAS dan Hadi Awang kerana mempergunakan agama demi kuasa politik. Puad Zarkashi menyifatkan Hadi sebagai ekstremis agama dan mendakwa PAS hanya relevan di kawasan majoriti Melayu tanpa sokongan kaum lain.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *