வாய்க்கு வந்ததை உளறாதீர்! ம.சீ.சவுக்கு அம்னோ எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

சொப்டம்பர் 11,

பொதுப்பல்கலைக்கழகத்தில் சீன மாணவர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக  ம.சீ.ச தலைவரும் முன்னாள் அமைச்சருமான  Datuk Seri Dr Wee Ka Siong முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு அடிப்படையிலேயே ஆதாரமற்ற உளறல் என அம்னோ இளைஞர் பிரிவு தலைவரும் மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினருமான  Datuk Dr Akmal Saleh சாடினார். பல்கலைக்கழக மாணவர்களின் தேர்வு இன அடிப்படையிலான பாகுபாட்டுடன் மேற்கொள்ளப்படுவதாக வீ கா சியோங் தெரிவிப்பது அபத்தமானது என்றும் தேர்வு முறைகள் குறித்து வெளிப்படயாக உயர்கல்வி அமைச்சு அறிவித்தும் அமைச்சராக இருந்த வீ கா சியோங் இவ்வாறு ஆதாரம் இல்லாமல் உளறுவது வேடிக்கையாக இருப்பதாகவும்  Datuk Dr Akmal Saleh தெரிவித்தார்.

தவறான கருத்துகளையும் பொறுப்பற்ற செய்தியையும் வெளியிட்ட அவர் ஓர் அரசியல் தலைவர், முன்னாள் அமைச்சர். அவர் இப்படி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கல்வித் துறையின் மீது சுமத்தியிருப்பது மக்களிடையே குழப்பத்தையும் நம்பகத்தன்மையையும் சீர்குலைக்கும் என்பதால் Datuk Seri Dr Wee Ka Siong உயர்கல்வி அமைச்சிடமும் பொதுப் பல்கலைக்கழகங்களிடமும் வெளிப்படையாகப் பகிரங்க மன்னிப்பைக் கேட்க வேண்டும் என Datuk Dr Akmal Saleh வலியுறுத்தினார். பாமர மக்கள் நுணுக்கமான தகவல் தெரியாமல் குற்றச்சாட்டை முன்வைப்பது இயல்பானது என்றாலும் அனுபவமிக்க அரசியல் தலைவர் ஒருவர் தவறான குற்றச்சாட்டை முன்வைப்பதை இலகுவாகக் கடந்து விட முடியாது என Datuk Dr Akmal Saleh எச்சரிக்கை விடுத்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *