துணிச்சல் இல்லாத ம.இ.கா! – அம்னோ கடுமையான சாடல்!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 11,

பாரிசானிலிருந்து வெளியேறுவதா இல்லையா என்கிற குழப்ப நிலையிலேயே ம.இ.காவும் ம.சீ.சவும் இருப்பதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி சாடினார். ம.இ.காவுக்கு உண்மையிலேயே துணிச்சல் இருந்தால் திட்டவட்டமாக ஒரு முடிவை எடுக்க வேண்டும், அதை விடுத்து பாசாங்குத்தனமாக ம.இ.காவின் இரண்டாம் கட்ட ஆதரவாளர்களின் மூலமாக பாரிசானிலிருந்து ம.இ.கா வெளியேற வேண்டும் என மறைமுகமாகக் கூக்குரலிட கூடாது என புவாட் சர்காஷி வலியுறுத்தினார். 

உண்மையிலேயே பாரிசானிலிருந்து ம.இ.கா ஒதுக்கப்படுகிறதா எனும் கேள்விக்கு நான் இல்லை என்றே பதிலளிப்பேன் என புவாட் சர்காஷி தெரிவித்தார். ஒரு சமூகத்தைப் பிரதிநிதிக்கும் கட்சியாக ம.இ.கா இருப்பதால் அந்த சமூகத்தாலேயே ம.இ.கா ஒதுக்கப்பட்ட போது கூட்டணிக் கட்சியில் ம.இ.காவின் பலம் எந்த அளவுக்கு இருக்க முடியும்? என்கிற கேள்வியை புவாட் சர்காஷி முன் வைத்தார். அதன் சொந்த சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ம.இ.காவைப் பாரிசான் இப்போதும் அரவணைக்கிறது. அதன் சமூகத்தின் ஆதரவை அந்த கட்சி பெற வேண்டும். அப்படி ஆதரவைப் பெற்றதும் பாரிசானிடமிருந்து அதிகாரத்தையும் ஆதரவையும் அந்த கட்சி பெறும் என புவாட் சர்காஷி தெரிவித்தார். 

ம.இ.கா பெரிக்காத்தானில் இணைவதால் அங்கே அவர்களுக்கு மரியாதை இருக்குமா என புவாட் சர்காஷி கேள்வி எழுப்பினார். 2023 பினாங்கு மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தானின் கெராக்கான் கட்சி தலைவர் டோமினிக் லாவ் பாஸ் கட்சியின் பிரச்சாரத்தில் அனுமதிக்கப்படாமல் பாஸ் கட்சியினரால் புறக்கணிக்கப்பட்டார். இந்த நிலையில் ம.இ.காவைப் பாஸ் கட்சி எப்படி அணுகும் என்பதை புவாட் சர்காஷி நினைவூட்டினார். 

இன்னமும் ம.இ.கா இந்தியர்களுக்கான கட்சி என பேசுகிறது. ம.இ.காவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினராக தாப்பா நாடாளுமன்றத்தின் சரவணன் இருக்கிறார். அவர் வெளிப்படையாகச் சொல்வாரா? தாப்பாவில் அவரை வெற்றிப் பெற செய்தது இந்தியர்கள் என்று?முடியாது. தாப்பாவில் 47% மலாய்க்கார வாக்குகள். பெரும்பான்மை வாக்காளர்கள் மலாய்க்காரர்களும் பூர்வக்குடியினரும் தான். இந்தியர்கள் பெரும்பாலானோர் பரிசானுக்கு எதிராக இருந்த போது தாப்பாவில் சரவணன் வெற்றி பெற்றார். அதற்கு காரணம் மலாய்க்காரர்கள் என்பதைச் சரவணனும் அறிவார். ஆனால் ம.இ,காவின் தலைவர் விக்னேஸ்வரன் சுங்கை சிப்புட்டில் தோல்வி அடைந்தார். அங்கே மலாய்க்காரர்களின் வாக்கு 37% மட்டுமே என்பதை புவாட் சர்காஷி சுட்டிக்காட்டினார். 

ம.இ.கா மீண்டும் வலுவடைய வேண்டும் என்கிற ஆசை அம்னோவுக்கும் உள்ளது. எனக்கும் தனிப்பட்ட முறையில் அரசியல் நிலைப்பாட்டில் ம.இ.காவினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் சொந்த சமூகத்தின் ஆதரவை இழந்த ஒரு கட்சிக்கு எவ்வளவு ஆதரவை வழங்க வேண்டுமோ அதற்கும் மேலாகப் பாரிசான் ம.இ.காவுக்கு ஆதரவளித்து வருகிறது என புவாட் சர்காஷி தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *