அம்னோ ஒரு கோழை! நஜீப்பை ஏமாற்றுகிறது! முன்னாள் அமைச்சர் சாடல்!

top-news
FREE WEBSITE AD


ஜனவரி 11,

முன்னாள் பிரதமர் நஜீப்பின் விவகாரத்தில் அம்னோ கோழைத்தனமாக இருப்பதாகவும் இது நாள் வரையில் நஜீப்பை ஏமாற்றிய அம்னோ இந்த அம்னோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி நஜீப்பைப் பாதுகாப்பதாகப் போலி நாடகம் ஆட விரும்புவதாகவும் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் Datuk Mohd Zaid Ibrahim கடுமையாகச் சாடினார். நஜீப்பிற்கு ஆதரவாக அம்னோ இருக்கிறது என்பதை நிரூபிக்க அம்னோ பேராளர் மாநாடு வரையும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அன்வாரிடம் நேரடியாகப் பேச தைரியமில்லாத அம்னோ என்ன செய்தாலும் அது போலியான நடவடிக்கையாகவே கருதப்படும் என Datuk Mohd Zaid Ibrahim தெரிவித்தார். 

நஜீப்பின் முழு அரசு மன்னிப்பைப் பிரதமர் எனும் முறையில் அமைச்சரவை மாமன்னருக்குப் பரிந்துரைக்க வேண்டும். அம்னோ ஆட்சியில் இருந்தாலும் அது அரசியல் கட்சி மட்டுமே என Datuk Mohd Zaid Ibrahim தெரிவித்தார். அம்னோ அதன் உறுப்பினர்களிடம் நேர்மையாக இல்லை. உறுப்பினர்களை வைத்து அம்னோ போலியான நம்பிக்கை நாடகத்தை ஆடுகிறது என Datuk Mohd Zaid Ibrahim சாடினார். நானும் அம்னோக்காரன் தான். இப்போதும் நான் புக்கிட் டாமான்சாரா அம்னோவின் உறுப்பினர் தான். நான் அமைச்சராக இருந்த காலத்திலும் நான் அம்னோக்காரன் தான். ஆனால் இப்போது அம்னோ நேரத்தை வீணாக்குகிறது. அம்னோ பேராளர் மாநாட்டில் தீர்மானம் ஏற்றுவதால் நஜீப்பிற்கு எதுவும் ஆகாது! அன்வார் பிரதமராக இருக்கும் வரையில் நஜீப் சிறையில் தான் இருப்பார். அன்வார் சும்மா விட மாட்டார். நஜீப்பைப் பழிவாங்குவதிலிருந்து அன்வார் பின்வாங்கமாட்டார் என Datuk Mohd Zaid Ibrahim கடுகையாகச் சாடினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *