அம்னோவுடன் பாஸ் இணைந்தால் இஸ்லாமியர்களுக்கு நல்லது! பாஸ் கட்சி!
- Thinagaren Sanggaren
- 26 Dec, 2025
டிசம்பர் 26,
பாஸ் கட்சியும் அம்னோவும் இணைந்து செயல்பட வேண்டும் எனும் அம்னோ இளைஞர் பிரிவின் தலைவர் அக்மால் சலேவின் அழைப்பைப் பாஸ் கட்சியின் தலைமை தொடர்பாளரான Ahmad Fadhli Shaari வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். அக்மல் சலேவின் இந்த பாஸ் அம்னோ கூட்டணியை மீண்டும் அமைக்க வேண்டும் என்பதற்கான மிக சரியான நேரம் இது என்றும், அரசியல் சூழலில் மலாய்க்காரர்களின் நிலைத்தன்மையையும் நம்பிக்கையையும் இது மேம்படுத்தும் என Ahmad Fadhli Shaari தெரிவித்தார்.
அக்மல் சாலேவின் ஆலோசனை வரவேற்கத்தக்கது, அதேவேளையில் கடந்த காலங்களில் Muafakat Nasional கூட்டணியில் ஏற்பட்ட கசப்பான அனுபங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க முக்கிய பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தனிக்குழு ஒன்றிணை அமைத்து Muafakat Nasional கூட்டணியைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் பாஸ் கட்சியின் தலைமை தொடர்பாளரான Ahmad Fadhli Shaari வலியுறுத்தினார். இது நடந்தால் கடந்த 3 ஆண்டுகளாக நிலைநிறுத்தப்படாத மலாய் இஸ்லாமியர்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்படும் என Ahmad Fadhli Shaari நம்பிக்கை தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



