சுமூகமான தீர்வுக்குப் பாஸ் கட்சியை அழைக்கும் அம்னோ! –அம்னோவுடன் கைக்கோர்க்கும் பாஸ்!
- Thinagaren Sanggaren
- 23 Sep, 2025
செப்டம்பர் 23,
பாஸ் கட்சியுடன் ஒரே மேசையில் அமர்ந்து தீர்வுக் காண விரும்புவதால் பாஸ் கட்சியைத் தாம் அழைப்பதாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Datuk Dr Akmal Saleh தெரிவித்துள்ளார். எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு என்பது இருக்கும். அப்படியான தீர்வை நோக்கி தாம் நகர விருப்பதால் பாஸ் கட்சியை அழைத்திருப்பதாக மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான Datuk Dr Akmal Saleh தெரிவித்தார். நகர்புற மேம்பாடு சட்டத்திருத்தம் குறித்து முழுமையான கலந்துரையாடலை நடத்த பாஸ் கட்சியுடனான சந்திப்பு அமையும் என Datuk Dr Akmal Saleh விளக்கமளித்தார்.
மலாய்க்காரர்களின் நிலம் URA நகர்புற மறுசீரமைப்புச் சட்டத்தால் பாதிக்கப்படுவதாக இருந்தால் அம்னோ அதனை ஆதரிக்காது. அதே வேளையில் மலாய்க்காரர்களின் நிலம் பாதிக்காமல் அரசு துறைகளின் மூலமாக மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியங்களையும் இந்த சந்திப்பில் மூலமாக உறுதிப்படுத்த வேண்டுமென Datuk Dr Akmal Saleh தெரிவித்தார். URA நகர்புற மறுசீரமைப்புச் சட்டத்தைக் கண்மூடித்தனமாக எதிர்த்து போராட்டம் நடத்துவதால் எந்தவொரு பயனும் இல்லை. அதே வேளையில் மலாய்க்காரர்களின் நிலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பும் அம்னோவுக்கு இருப்பதால் பாஸ் கட்சியுடனான கலந்துரையாடலுக்குத் தாம் அழைப்பு விடுத்திருப்பதாக Datuk Dr Akmal Saleh விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



