டி.ஏ.பியையும் அன்வாரையும் கும்பிடும் “கோமாளி” அம்னோ! பாஸ் கட்சி சாடல்!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 23, 

அன்வாரும் டி.ஏ.பியும் எதைச் சென்னாலும் அம்னோ அதற்கு ஆமாம் சாமி போடுவது போல தலையாட்டி பொம்மையாக மட்டுமே இருப்பதாகப் பாஸ் கட்சியின் உதவித் தலைவர் டத்தோ இட்ரிஸ் அஹ்மாட் சாடினார். பொதுத்தேர்தலில் சட்டமன்றத் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என டி.ஏ.பியின் முன்மொழிவை, அம்னோ அப்படியா ஆதரிப்பதால் அம்னோ டி.ஏ.பிக்கு அடிபணிந்து சேவையாற்றும் அரசியல் கோமாளியாகிவிட்டதாகப் பாகான் செராய் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ இட்ரிஸ் அஹ்மாட் தெரிவித்தார்.

கடந்த பொதுத்தேர்தலில் டி.ஏ.பி , பி.கே.ஆர் ஆட்சி அமைத்த்திருந்த மாநிலச் சட்டமன்றங்களைக் கலைக்க அப்போதைய அம்னோ தலைமையிலான அரசாங்கம் அழைப்பு விடுத்தது. அதனை டி.ஏ.பியும் பி.கே.ஆரும் பொருட்படுத்தவே இல்லை. அந்த நேரத்தில் பாஸ் கட்சியின் ஆட்சியில் இருந்த கெடா, கிளாந்தான், பெர்லிஸ், திரங்கானு ஆகிய மாநிலங்களும் சட்டமன்றத்தைக் கலைத்து ஒரே தேர்தலை அங்கீகரிக்க தயாராக இருந்தோம். ஆனால் டி.ஏ.பி, பி.கே.ஆர் ஆட்சியிலிருந்த சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்கள் சட்டமன்றத்தைக் கலைக்க மறுத்ததால் பாஸ் கட்சியும் நிராகரித்தது.

இப்போது திடீரென டி.ஏ.பி ஒரே தேர்தல் முறையை நடத்த கோரிக்கை விடுத்ததும் அம்னோ ஆமாம் சாமி போடுகிறது என டத்தோ இட்ரிஸ் அஹ்மாட் சாடினார். டி.ஏ.பியின் கோரிக்கையை ஏற்றால் அம்னோ இப்போது வென்றிருக்கும் 26 நாடாளுமன்றங்களில் மட்டுமே போட்டியிட முடியும் என்பதை அம்னோ உணர வேண்டும். கோளோட்சிய ஆட்சியை வழங்கிய அம்னோ, இப்போது கோமாளியாக்கப்பட்டுள்ளதை டத்தோ இட்ரிஸ் அஹ்மாட் நினைவூட்டினார்.

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *