அம்னோ மாநாட்டில் நஜீப்பிற்கு ஆதரவாகத் தீர்மானம்! – அம்னோ உறுதி!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 11,

முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு ஆதரவாகவே அம்னோ இன்று வரையும் துணை நிற்பதாக அம்னோ பொதுச் செயலாளர்  Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். இம்மாதம் நடைபெறவிருக்கும் அம்னோ பேராளர் மாநாட்டில் அம்னோவின் மாவட்டக் கிளைகளிடமிருந்து நஜீப்பிற்கு ஆதரவாகப் பல தீர்மானங்கள் முன்மொழியப்படவிருப்பதாகவும் இது நஜீப்பிற்கு அம்னோ பக்கப்பலமாக இருப்பதை உறுதிப்படுத்துவதாக  Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார்.  நஜீப் முன்னாள் பிரதமர், அம்னோவின் முன்னாள் தலைவரும் மட்டுமல்ல, அவர் புதிய அம்னோவின் வழிகாட்டி. நஜீப்பைப் பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் அம்னோவுக்கு உள்ளது என Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். 

மலேசியாவில் மொத்தம் 191 அம்னோ மாவட்டக் கிளைகள் உள்ளன. இதுவரையில் நஜீப்பிற்கு ஆதரவாக 175 மாவட்டக் கிளைகளிலிருந்து மொத்தம் 662 ஆதரவுக் கடிதங்களை அம்னோ பெற்றிருப்பதாகவும் இது தொடர்பான தீர்மானத்தை அம்னோ தேசிய பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்படும் என Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். மேலும் நாடு முழுவதும் உள்ள அம்னோ மாவட்டத் தலைவர்களும் அவர்களின் கருத்துகளை எழுத்துப்பூர்வமாக வழங்குவதன் மூலம் நஜீப்பிற்கு அம்னோ எந்த அளவிற்கு ஆதரவுடன் செயல்படுகிறது என்பதை நாட்டு மக்களுக்கும் நஜீப்பை எதிர்ப்பவர்களும் தெரியும் என Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *