அம்னோவுடன் இணைய பெரிக்காத்தானுக்கு விருப்பம்! - HAMZAH ZAINUDIN!

top-news

மார்ச் 25,

அம்னோவுக்கும் பெரிக்காத்தானுக்குமான உறவு அண்ணன் தம்பி உறவு போன்றது என்றும் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் பெர்சத்து துணைத் தலைவரும் பெரிக்காத்தான் பொதுச் செயலாளருமான HAMZAH ZAINUDIN தெரிவித்தார். அம்னோவும் பெரிக்காத்தானும் இணைந்தால் 104 நாடாளுமன்றங்களைக் கொண்டிருக்கு நிலை ஏற்படும் என்றும் ஆட்சி அமைக்க மேலும் 8 நாடாளுமன்றங்கள் தேவை என்பதால் அம்னோ பக்காத்தானைப் பங்காளியாக்கிக் கொண்டதாக அவர் தெரிவித்தார். 


அம்னோ பெரிக்காத்தானுடன் இணைவது குறித்தானப் பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடத்தப்பட்டிருந்தால் அம்னோ பெரிக்காத்தான் ஆட்சி அமைந்திருக்கும் என்றும் எதிர்காலத்தில் இது தொடர்பாக அம்னோ சிந்திக்க வேண்டும் என்றும் HAMZAH ZAINUDIN தெரிவித்தார். அம்னோவும் பெரிக்காத்தானும் எதிர்காலத்தில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் முழுமையாகவும் நிதானமாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் கூட்டணி சாத்தியமாகும் என பெர்சத்து துணைத் தலைவரும் பெரிக்காத்தான் பொதுச் செயலாளருமான HAMZAH ZAINUDIN தெரிவித்தார்.

Hamzah Zainudin menyatakan hubungan UMNO dan Perikatan Nasional seperti adik-beradik, dengan kemungkinan bekerjasama pada masa hadapan. Jika bergabung, mereka akan memiliki 104 kerusi Parlimen, tetapi masih memerlukan lapan lagi untuk membentuk kerajaan. UMNO diminta mempertimbangkan perkara ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *