அன்வாரை இழிவுப்படுத்தாதீர்! அம்னோவுக்குப் பி.கே.ஆர் இளைஞர் பிரிவு கண்டனம்!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 7,

நாட்டின் தற்போதைய எரிவாயு விலையேற்றத்தால் மக்கள் பாதிக்காமல் இருக்க மடானி அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில் 17 ஆண்டுகளுக்கு முன்னர் எரிவாயு விலை ஏற்றத்தைக் கண்டித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் பேசிய காணொலியை வெளியிட்டு அவதூறு பரப்பிய கெடா மாநில அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Mohd Raqib வெளியிட்டிருக்கும் பதிவு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பரப்பப்படுவதாகவும் அம்னோ தலைமை உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடாங் செராய் பி.கே.ஆர் பிரிவுத் தலைவர் Saiful Ambar Abdullah Ambar வலியுறுத்தினார்.

பரிசானும் பக்காத்தானும் இணைந்து மடானி அரசாங்கத்தை அமைத்திருக்கும் நிலையில் ஒற்றுமை கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிக்கும் விலையேற்றத்தில் பங்கு உள்ளது என்பதால் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இரு கூட்டணிகளுக்கும் உள்ளது என
Saiful Ambar Abdullah Ambar வலியுறுத்தினார். கெடா மாநில அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையை மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மீது அம்னோ தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பொதுமன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பாடாங் செராய் பி.கே.ஆர் பிரிவுத் தலைவர் Saiful Ambar Abdullah Ambar வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *