அம்னோ + பக்காத்தான் = பேய்களின் கூடாரம்! – பாஸ் கட்சி சாடல்!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 29,

அம்னோவும் பக்காத்தானும் இணைந்து அமைத்திருக்கும் Rumah Bangsa திட்டம் பேய்களின் கூடாரம் என பாஸ் கட்சியின் தலைவர் Tan Sri Abdul Hadi Awang சாடினார். துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தலைமையில் பக்காத்தானின் பி.கே.ஆர், அமானா, கட்சிகளும் பாரிசானின் அம்னோவும் இணைந்து மலாய் சமூகத்திற்காக அமைத்திருக்கும் Rumah Bangsa திட்டம் ஏமாற்று வேலை என்றும் இதனால் எந்த மலாய்க்காரர்களுக்கும் எந்தவொரு பயனும் இல்லை என்றும் Tan Sri Abdul Hadi Awang தெரிவித்தார். 
மலாய் அரசியல் தலைவர்களை ஒரு குடையின் கீழ் அமைக்க வேண்டும் என்பது பாஸ் கட்சியின் திட்டம். அந்த திட்டத்தை அம்னோ திருடி இப்போது இந்த Rumah Bangsa திட்டத்தைச் செயல்படுத்தவிருக்கிறது என அடி அவாங் குற்றம் சாட்டினார். ஆட்சியில் இருக்கும் அம்னோ இப்படியான குழுவை அமைக்க கூடாது. அவர்கள் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என அப்தூல் அடி அவாங் வலியுறுத்தினார். 

பாரிசான் பக்காத்தான் கூட்டணியில் டி.ஏ.பி இருக்கிறது. டி.ஏ.பியை வைத்துக் கொண்டு மலாய்க்காரர்களின் நலத்திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என Tan Sri Abdul Hadi Awang தெரிவித்தார். அம்னோ கடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் டி.ஏ.பி. அம்னோவைக் கடுமையாக விமர்சித்த டி.ஏ.பியுடன் இப்போது ஆட்சிக்காகக் கூட்டணியில் இருக்கிறது அம்னோ. அப்படியானால் மீண்டும் ஆட்சிக்காக இதே Rumah Bangsa திட்டத்தைக் கைவிடவும் அம்னோ தயாராகும் என பாஸ் கட்சியின் தலைவர் Tan Sri Abdul Hadi Awang சாடினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *