அம்னோவில் 21,858 புதிய உறுப்பினர்கள்! வளமாகும் அம்னோ!

top-news
FREE WEBSITE AD

ஜூன் 13,

அம்னோவின் RUMAH BANGSA திட்டத்தின் வழியாக அம்னோவிலிருந்து விலகிய பலரும் மீண்டும் அம்னோவில் சமரசமின்றி இணைந்து வரும் நிலையில் இதுவரை 21,858 புதிய உறுப்பினர்கள் அம்னோவில் இணைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ மலாய் வாக்காளர்களின் நம்பிக்கை இழப்பதற்குச் சில முக்கிய தலைவர்கள் அம்னோவிலிருந்து விலகியது தான் முதன்மை காரணம் என்பதால் அவர்களை மீண்டும் அம்னோவில் இணைக்க இந்த RUMAH BANGSA  திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

RUMAH BANGSA திட்டத்தைத் தொடங்கியதும் அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் KHAIRY JAMALUDDIN, அம்னோவின் முன்னாள் உதவித் தலைவர் HISHAMUDDIN ஆகியோர் மீண்டும் அம்னோவில் இணைந்தனர். பெர்சத்துவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலுக்குப் பின்னர் பெர்சத்துவிலிருந்து பலரும் மீண்டும் அம்னோவுக்குத் திரும்பினர். தற்போது அம்னோவின் முன்னாள் உதவித் தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களும் அம்னோவில் மீண்டும் இணைந்துள்ளனர். இதுவரையில் அம்னோவிலிருந்து விலகி மற்ற கட்சிகளுக்குச் சென்றவர்கள் என நம்பப்படும் 10,000 க்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் அம்னோவில் இணைந்திருப்பதாக அம்னோ பொதுச் செயலாளர்  Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *