அம்னோ மாநாட்டில் பிற கட்சிகளுக்கு இடமில்லை! - அம்னோ தலைமை திட்டவட்டம்!

top-news
FREE WEBSITE AD

இந்த ஆண்டு அம்னோவின் தேசிய மாநாட்டில் பிற கட்சிகளுக்கு அழைப்பு இல்லை என அம்னோ பொதுச் செயலாளர் Datuk Asyraf Wajdi Dusuki வெளிப்படையாக அறிவித்துள்ளார். எதிர்வரும் 21 முதல் 24 ஆகஸ்ட் நடைபெறவிருக்கு அம்னோவின் தேசிய மாநாடு அம்னோ குடும்பத்திற்கானது மட்டுமே, கடந்த ஆண்டைப் போல ஒற்றுமைக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு அம்னோ அழைப்பு விடுக்காது என்றும் அது தேவையற்றது என்றும் அவர் தெரிவித்தார்.

இதனால் அம்னோ தனித்து இயங்குவதாகப் பொருள்படாது என்றும் ஆட்சியின் முக்கியத்துவத்தை அறிந்து ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோவின் ஆதரவில் எந்தவொரு சிக்கலும் இல்லை என்றும் அவர் உறுதியளித்தார். இது அடுத்த பொதுத்தேர்தலுக்காக அம்னோவை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாகத் தாம் கருதியிருப்பதாக அம்னோ பொதுச் செயலாளர் Datuk Asyraf Wajdi Dusuki நம்பிக்கை அளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *